WhatsApp Tips & Tricks: மற்றவர்களின் ஸ்டேட்டஸை அவர்களுக்கு Notify செய்யாமல் பார்ப்பது எப்படி?

சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் மிகவும் பிரபலமானவையாக இருந்தாலும்கூட உலகளவில் தகவல் பரிமாற்றம் செய்யப்படும் செயலிகளில் வாட்ஸ்அப்தான் முதலிடத்தில் உள்ளது.

இது மட்டுமன்றி அலுவலகம், கல்வி என அனைத்துத் தகவல் பரிமாற்றத்திற்கும் வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மற்ற செயலிகளைவிட வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.

நான் தினமும் பயன்படுத்தும் இந்த ஆப்பில் நமக்குத் தெரியாத நிறைய அம்சங்களும் உள்ளன. நிறையப் பேர் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போடுவதைப் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அதில் சிலர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போடவில்லை என்றாலும் மற்றவர்கள் போடுவதைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். பொதுவாக வாட்ஸ்அப்பில் ஒருவர் ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் இதுவரை யாரெல்லாம் அதைப் பார்த்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்துவிடும்.

WhatsApp

ஆனால் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நாம் ரகசியமாகவும் பார்க்க முடியும். அதாவது ஸ்டேட்டஸ் போட்டவர் கண்டுபிடிக்காதவாறு நாம் அவரின் ஸ்டேட்டஸை ரகசியமாகப் பார்த்துவிட முடியும். இதற்கு நாம் மற்ற செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம். வாட்ஸ்அப்பிலேயே அதற்கான ஆப்ஷன் உள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள வலப்பக்கக் கார்னரில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்து செட்டிங்ஸுக்குள் (settings) நுழைந்து அக்கவுன்ட்டை (account) கிளிக் செய்து Privacy-ல் இருக்கும் Read Receipts ஆப்ஷனை ஆஃப் செய்தால் நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்பது மற்றவர்களுக்குத் தெரியாது.

Read Receipts ஆப்ஷனை ஆஃப் செய்வதன் மூலம் உங்களுக்கு வரும் மெசேஜைப் படிக்கும்போது புளூ டிக் காட்டாது. இதனால் நீங்கள் அதைப் படித்துவிட்டீர்களா என்று மற்றவர்களுக்குத் தெரியாது. இதுகூட நம்மில் பலருக்குத் தெரியும். இதைத் தவிர்த்து சில ட்ரிக்ஸ்களும் வாட்ஸ்அப்பில் உண்டு.

அவை என்னவென்றால், நாம் ஆஃப்லைனில் இருந்தும்கூட மற்றவர்களின் ஸ்டேட்டஸைப் பார்க்க முடியும். அது எப்படி என்ற கேள்வி உங்களுக்கு வரும். கூகுள் பிரௌசருக்குள் சென்று incognito mode என்பதை ஆன் செய்தால் போதும். நீங்கள் ஆன்லைனிற்கு வராமலேயே மற்றவர்களின் ஸ்டேட்டஸைப் பார்க்க முடியும். நீங்கள் ஸ்டேட்டஸ் பார்த்தது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் மீண்டும் ஆன்லைனிற்கு வந்தால் மற்றவர்களுக்கு நீங்கள் பார்த்தது தெரிந்துவிடும். ஆனால், அவர்கள் ஸ்டேட்டஸ் போட்ட உடனே நீங்கள் பார்த்ததுபோல் அவர்களுக்குக் காட்டாது.

file manager

இதுமட்டுமன்றி, போனில் உள்ள ‘File Manager’ மூலமும் நீங்கள் ஸ்டேட்டஸைப் பார்க்கலாம். அதற்கு நீங்கள், உங்கள் போனில் உள்ள file manager உள்ள இன்டெர்னல் ஸ்டோரேஜ்-க்குச் சென்று வாட்ஸ்அப் என்ற ஃபோல்டரில் (folder) உள்ள மீடியாவை கிளிக் செய்தால் ஸ்டேட்டஸஸ் டவுன்லோடு (Statuses download) என்று ஒரு ஃபோல்டர் காண்பிக்கும். அதற்குள் சென்று நீங்கள் பார்க்க வேண்டிய ஸ்டேட்டஸை டவுன்லோடு செய்து பார்த்துக்கொள்ளலாம். வேறு ஃபோல்டர்களுக்கும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், இதைச் செய்ய ‘Hidden Files’-ஐயும் காட்டும் ஆப்ஷன் உங்களின் ‘File Manager’ ஆப்பில் இருக்கவேண்டும். அப்படிக் காட்டுவதற்கான ஆப்ஷனை Enable செய்துவிட்டே இதை நீங்கள் செய்ய முடியும். தவிர வாட்ஸ்அப்பில் ‘Status’ விண்டோவுக்கும் ஒருமுறை சென்றுவிட்டு வந்தால் மட்டுமே அவற்றுள் இருப்பவை தற்காலிகமாக இந்த ‘File Manager’ ஆப்பில் வந்து உட்காரும்.

இவை அனைத்திற்கும் எந்த ஒரு செயலியையும் நீங்கள் டவுன்லோடு செய்யத் தேவையில்லை. இதுபோன்று நிறைய டிப்ஸ் & ட்ரிக்ஸ்களும் வாட்ஸ்அப்பில் உண்டு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.