இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், டெத் க்ளைமில் கிட்டதட்ட 20% சரிவினைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், இந்தளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
க்ளைம் எண்ணிக்கையானது குறைந்திருந்தாலும், தொகை வடிவில் பார்க்கும்போது தற்போது கொரோனாவுக்கு முந்தைய அளவிலான தொகையை விட அதிகமாக உள்ளது.
எல்ஐசியில் இப்படி ஒரு பாலிசி இருக்கா.. எதிர்காலத்தை பற்றி கவலையே வேண்டாம்..!
டெத் க்ளைம்
முதல் காலாண்டில் மடடும் டெத் க்ளைம் ஆக 5,743 கோடி ரூபாயாக க்ளைம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 7111 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எல் ஐசி-யின் தலைவர் எம் ஆர் குமார் நிறுவனத்தின் காலாண்டு முடிவுக்கு பிறகு இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம்
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் க்ளைம் விகிதம் குறைந்துள்ளது. எனினும் ஸ்டேபிள் ஆக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவின் தாக்கம் அதிகரித்த போது, மக்கள் பலரும் கொரோனாவினால் இறந்தனர். இதன் காரணமாக இறப்பு பலன் விகிதம் கணிசமாக அதிகரித்தது.
LIC லாபம்
நடப்பு காலாண்டிலும் இறப்பு பலன் விகிதம் கணிசமான குறைந்துள்ளது. எனினும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டவில்லை.
நடப்பு நிதியாண்டின் முதல் காலண்டில் நிகலாபம் 682.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2.94 கோடி ரூபாயாக இருந்தது.
இன்றைய பங்கு நிலவரம்?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 1.48% குறைந்து, 685.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகும். இன்றைய 52 வார குறைந்தபட்ச விலை 650 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 1.51% குறைந்து, 949 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 650 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 698.50 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 650 ரூபாயாகவும் உள்ளது.
LIC sees 20% fall in death claim in June quarter as covid impact
எல்ஐசி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 20% டெத் க்ளைம் சரிவு.. நல்ல விஷயம் தானே!/LIC sees 20% fall in death claim in June quarter as covid impact