ஐதராபாத்:
அல்லு
அர்ஜுன்,
ராஷ்மிகா
மந்தனா,
ஃபஹத்
பாசில்
நடிப்பில்
கடந்தாண்டு
வெளியான
‘புஷ்பா’
ப்ளாக்
பஸ்டர்
ஹிட்
அடித்தது.
பான்
இந்தியா
படமாக
வெளியான
‘புஷ்பா’
தெலுங்கு,
தமிழ்,
இந்தி
என
அனைத்து
மொழி
ரசிகர்களிடமும்
வரவேற்பைப்
பெற்றது.
இந்தப்
படத்தின்
இரண்டாம்
பாகம்
குறித்து
தயாரிப்பு
நிறுவனம்
தரமான
அப்டேட்டை
வெளியிட்டுள்ளது.
வசூல்
வேட்டையாடிய
புஷ்பா
சுகுமார்
இயக்கத்தில்
கடந்தாண்டு
டிசம்பர்
மாதம்
வெளியான
புஷ்பா
படத்தில்
அல்லு
அர்ஜுன்
ஹீரோவாக
நடித்திருந்தார்.
அவருக்கு
ஜோடியாக
ராஷ்மிகா
மந்தனாவும்,
வில்லன்களாக
ஃபஹத்
பாசில்,
தனஞ்செய்,
சண்முக்,
சுனில்,
அனுசுயா
பரத்வாஜ்
அஜய்
கோஸ்
ஆகியோர்
நடித்திருந்தனர்.
பான்
இந்தியா
ஜானரில்
தெலுங்கு,
தமிழ்,
இந்தி
உட்பட
5
மொழிகளில்
வெளியான
புஷ்பா,
வசூலில்
தரமான
சம்பவம்
செய்தது.
குறிப்பாக
பாலிவுட்டில்
இந்திப்
படங்களின்
வசூலுக்கே
தண்ணி
காட்டியது.
கமர்சியல்
ப்ளஸ்
ஆக்சன்
செம்மரக்
கடத்தலை
பின்னணியாகக்
கொண்டு
உருவாகியிருந்த
‘புஷ்பா’
படத்தில்,
கூலித்
தொழிலாளியான
அல்லு
அர்ஜுன்,
சிண்டிகேட்
தலைவராக
எப்படி
மாறுகிறார்
என்பதை
காட்டியிருந்தார்
இயக்குநர்
சுகுமார்.
படம்
தொடங்கியதில்
இருந்தே
ஆக்சனில்
தூள்
கிளப்பிய
அல்லு
அர்ஜுன்,
நடிப்பிலும்
அசுரத்தனமாக
ஸ்கோர்
செய்திருந்தார்.
அதேபோல்,
ராஷ்மிகாவை
காதலிக்கும்
காட்சிகளும்,
செம்ம
ரகளையாக
இருக்கும்.
இறுதியாக
வந்த
ஃபஹத்
பாசில்
புஷ்பா
படத்தின்
முதல்
பாகத்தில்
இறுதி
இருபது
நிமிடங்களில்
தான்
ஃபஹத்
பாசில்
அறிமுகமாவார்.
பன்வர்
சிங்
ஷெகாவத்
ஐபிஎஸ்
என்ற
கேரக்டரில்
மொட்டை
தலையுடன்
மிரட்டலாக
என்ட்ரி
கொடுத்த
ஃபஹத்துக்கும்
அல்லு
அர்ஜுனுக்கும்
கெமிஸ்ட்ரி
செம்மையாக
இருந்தது.
இரண்டாம்
பாகத்தில்
இவர்கள்
இருவருக்குமான
மோதல்கள்
இன்னும்
பட்டையைக்
கிளப்பும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்
சேதுபதி
மிஸ்ஸிங்
புஷ்பா
முதல்
பாகத்திலேயே
விஜய்
சேதுபதியை
நடிக்க
வைக்க
பேச்சுவார்த்தைகள்
நடத்தப்பட்டன.
ஆனால்,
கால்ஷீட்
பிரச்சினையால்
அது
முடியாமல்
போனது.
இந்நிலையில்,
இரண்டாம்
பாகத்தில்
விஜய்
சேதுபதி
நடிக்கலாம்
என
கூறப்பட்ட
நிலையில்,
தற்போது
அதும்
இல்லையென்றாகி
விட்டது.
இதனிடையே
முதல்
பாகத்தில்
பாடல்களிலும்
பின்னணி
இசையிலும்
மாஸ்
காட்டிய
தேவி
ஸ்ரீ
பிரசாத்,
இரண்டாம்
பாகத்தையும்
தெறிக்கவிட
ரெடியாகிவிட்டார்.
நாளை
பூஜையுடன்
தொடக்கம்
புஷ்பா
இரண்டாம்
பாகத்தில்
அல்லு
அர்ஜுன்
தனது
சாம்ராஜ்யத்தை
எவ்வாறு
விரிவுபடுத்தினார்
என்று
திரைக்கதை
பயணிக்கும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக
சீனா,
தாய்லாந்து
போன்ற
நாடுகளிலும்
படப்பிடிப்பு
நடைபெறும்
என
சொல்லப்படுகிறது.
இதனால்,
இரண்டாம்
பாகத்தின்
மீதான
எதிர்பார்ப்பு
அதிகரித்து
வரும்
நிலையில்,
இதன்
படப்பிடிப்பு
நாளை
பூஜையுடன்
தொடங்கும்
என
மைத்ரி
மூவி
மேக்கர்ஸ்
அறிவித்துள்ளது.
இதனால்
அல்லு
அர்ஜுன்
ரசிகர்கள்
கொண்டாட்டத்தில்
உள்ளனர்.