சென்னையில் புதிய விமான நிலையம் அமையவுள்ள நிலங்களுக்கு மிக அதிக அளவில் இழப்பீடு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மறுத்துள்ளார்.
பரந்தூரில் விமானநிலையம் அமைக்கப்படவுள்ள நிலையில் அங்குள்ள நிலங்களின் மதிப்பை அதிகரித்து காட்டுவதற்காக வழிகாட்டி மதிப்பை விட அதிக விலைக்கு கிரையம் செய்ததுபோல் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அரசிடமிருந்து அதிக இழப்பீடை பெற மோசடி நடைபெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர் மூர்த்தி, அரசுக்கு இழப்பு ஏற்படாத வகையிலும் நில உடமையாளர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM