நாட்டில் எற்கனவே பசுவதை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்பொழுது பாஜக முனால் எம்எல்ஏ பசுவதை செசெய்பவர்களை கொலை செய்வோம் என்று பேசி உள்ளார். இது குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரவியது. அதில் பேசிய அவர் “யாராக இருந்தாலும் சொல்லுங்கள்.
நான் ஜாமீனில் எடுக்கிறேன். இதுவரைக்கும் ஐந்து பேரை கொன்றிருக்கோம்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. கியான் தேவ். பசுவதையில் ஈடுபடுபவர்களை இப்படி அவர் கொலை செய்ய சொல்லி பேசி இருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது .
ராஜஸ்தானில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ். இவர் பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள். நான் ஜாமீனில் எடுக்கிறேன் என்று பேசி இருக்கிறார். அவர் மேலும் , இதுவரைக்கும் ஐந்து பேரை கொலை செய்திருக்கிறோம் என்றும் பேசி இருக்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் நோக்கில் ஈடுபடுவதாக கியான் தேவ் மீது 153 ஏ பிரிவின் கீழ் ராஜஸ்தான் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான் தேவ் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன .
இதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது . மத ரீதியிலான பயங்கரவாதத்தை பாஜக பரப்புகிறது என்பதை நிரூபிக்க இதைவிட என்ன ஆதாரம் தேவை இருக்கிறது என்று கேட்டு வருகிறது.
பாஜக முன்னாள் எம்எல்ஏ கருத்து இப்படி சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இதற்கு பாஜக விளக்கம் அளித்து இருக்கிறது. கியான் தேவ் பேச்சுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.
பாஜக முன்னாள் எம்எல்ஏ வின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.