சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
ராமாபுரம், போரூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் நந்தனம், ஐயப்பன்தாங்கல், மாங்காடு, ஆதம்பாக்கம், ஆலந்தூர், மாம்பலம், மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, காசிமேடு, ராயபுரம், சென்ட்ரல், புரசைவாக்கம் பட்டாளம், ஓட்டேரி மற்றும் சூளை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் கடந்த அரை மணி நேரமாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்துவருகிறது.
கோடம்பாக்கம், கே.கே.நகர், அசோக் பில்லர், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, துரைபாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, மந்தவெளி ஆகிய இடங்களிலும் கனமழை பெய்துவருகிறது.
அதேபோல் அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் குரோம்பேட்டையிலும் அரைமணி நேரமாக இடியுடன் கனமழை பெய்துவருகிறது. கோட்டூர்புரம் மற்றும் கிரீன்வேஸ் சாலைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளான தாம்பரம் பல்லாவரம் பகுதியில் மழை பெய்துவருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM