கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலக அளவிலான கொரோனா பாதிப்பு 60 கோடியை நெருங்கி வரும் நிலையில், மொத்த உயிரிழப்பு 64.68 கோடியை தாண்டியுள்ளது என தகவல் கிடைத்துள்ளது
இந்த நிலையில் இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவையும் அந்த நோய் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 10 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த நபர் யார், எங்கிருந்து பயணம் மேற்கொண்டார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்தோனேசியாவின் அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. இதேபோல் தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.