அந்த 30 நிமிடங்கள்… ஓபிஎஸ் உடன் ரகசிய ஆலோசனை- வெல்லமண்டி சொன்ன தகவல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைந்து ஓராண்டாகி விட்டது. இந்நிலையில் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, தலைவர்கள் பலரும் பெரியகுளத்தில் உள்ள

வீட்டிற்கு நேரில் வருகை புரிந்தனர். விஜயலட்சுமி படத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அப்படியே ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தினர்.

அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக விளங்கும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவரும், முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், மாவட்ட அதிமுக பொறுப்பாளர் மனோகரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்துடன் சுமார் 30 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார் வெல்லமண்டி நடராஜன்.

இந்த விஷயம் பரபரப்பை கூட்டியுள்ளது. அதிமுகவில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதா? இல்லை யாராவது தூது அனுப்பியிருப்பார்களா? புதிதாக யாராவது ஈபிஎஸ் தரப்பில் இருந்து வருகிறார்களா? போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது வெல்லமண்டி நடராஜன் பதிலளிக்க மறுத்து விட்டார். இவரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கிறார்.

நடத்திய முதல் பொதுக்குழுவில் கலந்து கொண்ட நிலையில், அடுத்த பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. இதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான முழக்கம் ஓங்கி ஒலித்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டினார் எடப்பாடி பழனிசாமி.

அதில் தீர்மானங்கள் எதுவும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. புதிய அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டது.

தேனி வந்த ஓபிஎஸ் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் ஈபிஎஸ் தரப்பு ஆட்டம் கண்டது. உடனே சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் ஈபிஎஸ் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழுவை கூட்டி தங்களின் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று உறுதியாக கூறிவிட்டனர். இதனால் அடுத்து என்ன செய்வது? என்ற ஆலோசனையில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறார். அதற்கு மனைவி விஜயலட்சுமியின் நினைவு நாள் ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.