நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு.. மக்கள் நிம்மதி..!

டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் மீதான கட்டணங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட கட்டுரையை மூலம் சந்தையில் பல விவாதங்களை உருவாகி வரும் நிலையில் மத்திய நிதியமைச்சக் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் குறிப்பாக, சிறு குறு கிராமங்கள் வரையில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளைக் கொண்டு செல்ல மிக முக்கியக் காரணமாக இருந்தது யூபிஐ சேவை தான்.

இந்த நிலையில் யூபிஐ சேவை மீது கட்டணங்கள் விதிக்கும் திட்டம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

இன்னும் எத்தனை நாள் இலவசம்.. UPI சேவைக்குச் செக் வைக்கும் ஆர்பிஐ..?!

யூபிஐ கட்டமைப்பு

யூபிஐ கட்டமைப்பு

யூபிஐ கட்டமைப்புத் தற்போது பிரிட்டன், வளைகுடா நாடுகள் உட்படப் பல நாடுகளில் பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த வேகமாக வளரச்சி பாதையில் முட்டுக்கட்டை போடும் வகையில் ஆர்பிஐ யூபிஐ பேமெண்மட் மீது கட்டணங்களை விதிக்க ஆலோசனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

UPI சேவை பொதுமக்களுக்கு அபரிமிதமான வசதிகளை அளிப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதார உற்பத்தி ஆதாயங்களைக் உருவாக்கும் முக்கியக் கட்டமைப்பாக விளங்குகிறது. இந்த நிலையில் UPI சேவைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க அரசு எந்தத் திட்டமும் இல்லை. இதே வேளையில் செலவுகளைக் கட்டுப்படுத்த மாற்று வழிகளை யோசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என நிர்மலா சீதாராமன் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

அரசு நிதியுதவி
 

அரசு நிதியுதவி

டிஜிட்டல் பேமெண்ட் எகோசிஸ்டம் மேம்படக் கடந்த ஆண்டு அரசு நிதியுதவி வழங்கியது, இதேபோல் இந்த ஆண்டும் அவ்வாறான கொடுப்பனவுகளை இச்சேவையை ஊக்குவிக்க நிதியுதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

ரூபே டெபிட் கார்டு

ரூபே டெபிட் கார்டு

ஜனவரி 2020 இல், UPI மற்றும் உள்நாட்டில் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மீதான வணிகத் தள்ளுபடி விகிதத்தை (MDR) மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதன் வாயிலாக UPI வாயிலாகப் பேமெண்ட் புதிய உச்சத்தைத் தொட்டது.

MDR கட்டணம்

MDR கட்டணம்

MDR என்பது வங்கி, கார்டு நெட்வொர்க் மற்றும் பாயின்ட் ஆஃப் சேல் போன்ற ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கும், ஈகாமர்ஸ் மூலம் ஷாப்பிங் போது ஆன்லைன் பேமெண்ட்-க்கும் வணிகரால் வங்கிக்குச் செலுத்தப்படும் கட்டணமாகும்.

UPI சேவை

UPI சேவை

இந்தியாவில் ஜூலை 2016 இல் UPI சேவை மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 38 லட்சம் ரூபாய், ஆனால் ஜூலை 2022 இல் இதன் மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய். இதோடு நிற்காமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மேலும் யூபிஐ சேவையைத் தற்போது இந்தியா உலக நாடுகளிலும் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது இதன் கூடுதல் சிறப்பு.

2 முக்கிய விஷயங்கள்

2 முக்கிய விஷயங்கள்

இந்தியாவில் UPI சேவை பெரிய அளவில் பிரபலமாக 2 விஷயங்கள் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

1. எளிதாகப் பயன்படுத்த கூடியவை
2. முற்றிலும் இலவசம்

2 ரூபாய் செலவு

2 ரூபாய் செலவு

ரிசர்வ் வங்கியின் சொந்தக் கணக்கீடுகளின் படி – நீங்கள் ஒரு கடைக்காரருக்கு UPI மூலம் 800 ரூபாய்ச் செலுத்தினால், யூபிஐ கட்டமைப்பை இயக்கும் வங்கிகள், NPCI மற்றும் பேமெண்ட் சேவை வழங்குபவர்கள் ஆகியோருக்கு சுமார் 2 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.

1250 கோடி ரூபாய்-க்கு நிதியுதவி

1250 கோடி ரூபாய்-க்கு நிதியுதவி

எனவே UPI பரிவர்த்தனைகளின் கணக்கில் எடுத்துக் கொண்டால், NPCI அமைப்பு ஒவ்வொரு மாதமும் 1250 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்து வருகிறது. இந்தச் செலவுகளைத் தான் மத்திய அரசின் நிதியுதவிகள் மூலம் ஈடு செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

No proposal to charge UPI payments says Nirmala sitharaman

No proposal to charge UPI payments says Nirmala sitharaman நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு.. மக்கள் நிம்மதி..!

Story first published: Monday, August 22, 2022, 9:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.