தன்னை தானே திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை நடிகை!

ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் திருமணம் என்றிருந்த நிலை மாறி தற்போது ஓரினசேர்க்கையாளர்களும் திருமணம் செய்ய தொடங்கிவிட்டனர்.  இவற்றை விட தற்போது லேட்டஸ்டாக இருப்பது ஸோலோகமி எனப்படும் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம், இந்த திருமணம் தற்போது தலைதூக்க தொடங்கியுள்ளது.  தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள், சில சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ள கனிஷ்கா சோனி என்கிற நடிகை தற்போது தன்னை தானே திருமணம் செய்துகொண்டு இருக்கிறார்.  பவித்ரா ரிஷ்டா, என் கணவன் என் தோழன் போன்ற தொடர்கள் மூலம் இவர் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர்.  தன்னை தானே திருமணம் செய்துகொண்டிருக்கும் செய்தியினை இவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார், மேலும் நெற்றியில் குங்குமம் மற்றும் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 6ம் தேதி தெரிவிக்கையில், ‘என்னுடைய கனவுகளை நானே தான் சொந்தமாக நிறைவேற்றினேன் அதனால் என்னை நானே திருமணம் செய்துகொள்கிறேன்.  என்னை நானே விரும்புகிறேன், என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கொரு ஆண் தேவையில்லை. 
தனியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் ஒரு கடவுள், எனக்குள் நிறைய சக்தி, சிவன் & சக்தி போன்ற எல்லாம் எனக்குள் இருக்கிறது, நன்றி’ என்று கூறியுள்ளார்.  இதனைத்தொடர்ந்து இணையத்தில் பலரும் இவரை ட்ரோல் செய்ய தொடங்கினர்.  தன்னை ட்ரோல் செய்பவர்கள் குறித்து கனிஷ்கா தெரிவிக்கையில், என்னுடைய திருமணத்தை பற்றி நீங்கள் நிறைய கேள்விகளை எழுப்பி வருகிறீர்கள்.  நான் இந்திய கலாச்சாரத்தை நான் நம்புகிறேன், என்னுடைய சில தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளது அதனால் தான் நான் இந்த திருமணத்தை செய்துகொண்டேன்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared asoni)

திருமணம் என்பது செக்ஸ் மட்டுமல்ல, ஒருவரிடமிருந்திருந்து காதல் மற்றும் நம்பிக்கையை பெறுவது, ஆனால் நான் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டேன்.  அதனால் தனியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான், வெளியுலகில் அன்பை தேடுவதை விட என்னை நான் நேசிப்பதே சிறந்ததாக எனக்கு இருக்கிறது.  என்னை நீங்கள் கூகுள் மற்றும் செய்திகளில் ட்ரெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி, இது நான் சுய நினைவோடு என் முழு மனதோடு எடுத்த முடிவு தான், இந்த முடிவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  இப்போது நான் அமெரிக்காவில் இருக்கிறேன், எனது கேரியரில் நான் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.