கொரோனா பல விஷயங்களை நம்முடைய இயல்பான வாழ்க்கை முறையில் மாற்றியுள்ளது, உதாரணமாக யாராவது தும்பினாலோ, இரும்பினாலோ சுற்றி இருக்கும் அனைவரும் அவரைப் பார்ப்பது, மாஸ்க் எந்த நேரமும் அணிந்துகொண்டு இருப்பது, சுத்தமாக இருப்பதில் அதிகமாகக் கவனம் செலுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் மாறியுள்ளது.
இதேபோன்ற மாற்றங்கள் வர்த்தகத் துறையிலும், வேலைவாய்ப்பு சந்தையிலும், ஊழியர்கள் மத்தியிலும் மாறியுள்ளது. இதில் தற்போது நிறுவனங்களுக்கு முக்கியப் பிரச்சனையாக விளக்குவது ஊழியர்களின் செயல்பாடுகள் தான்.
ஒரு வாழைப்பழத்திற்கு 0000 டாலரா.. இத்தாலிய வாழைப்பழ கலைஞர் மீது வழக்கு.. ஏன்?
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக்குப் பின்பு வொர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரம் பெரிய அளவில் ஊழியர்களுக்கு வசதிகளையும், வாய்ப்புகளையும் கொடுத்தாலும், சிலருக்கு மட்டுமே இந்த லக் அடித்துள்ளது எனக் கூறலாம். பல துறையில் இந்தக் கொரோனா காலத்தில் அதிக நேரமும், அதிகப்படியான பணி சுமையை எதிர்கொண்டனர்.
அலுவலகம்
மேலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ள போதும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதில் அதிகளவிலான தயக்கத்தைக் காட்டி வருகின்றனர். இதேபோல் நிறுவனங்களும் வாரத்தில் 3 நாள் 2 நாள், அருகில் இருக்கும் அலுவலகத்திற்கு வந்தால் போதும் என்ற பல சலுகைகளைக் கொடுத்தாலும், ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர்.
மெத்தனம்
இதன் மூலம் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் தற்போது ஊழியர்கள் மத்தியில் மெத்தனம் (White-collar lethargy) அதிகரித்துள்ளது எனப் புலம்பி வருகின்றனர். இதுதான் New Normal-ஆ என்ற அச்சமும், கேள்வியும் நிறுவனங்கள் மத்தியில் எழுத்துள்ளது தான்.
காலியான அலுவலகம்
இதற்கு முக்கியக் காரணம் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்தும், இன்னும் பல பெரிய அலுவலகங்கள் காலியாகவே காட்சி அளிக்கிறது. இதனால் அலுவலகம் மற்றும் அலுவலகங்களைச் சார்ந்து இயங்கும் வர்த்தகமும் சரிந்துள்ளது.
புதுபுது காரணங்கள்
இதேபேோல் அலுவலகத்திற்கு வராத ஊழியர்கள், அலுலவகத்திற்கு ஏன் வர முடியவில்லை எனக் கேட்டால் புதுபுது காரணங்களை அடுக்கின்றனர், இன்னும் சில ஊழியர்கள் மத்தியில் குறைவான ஈடுபாடு, அர்ப்பணிப்பு மற்றும் உரிமை இல்லாமை, உற்பத்தித்திறன் வீழ்ச்சி போன்ற பல பிரச்சனைகளையும் நிறுவனங்கள் எதிர்கொள்கின்றது.
Is White-collar lethargy is new nomal in post pandemic; CEO’s under pressure
Is White-collar lethargy is new nomal in post-pandemic; CEO’s under pressure இவ்வளவு மெத்தனமா.. ஊழியர்களைச் செய்யும் வேலையைப் பாத்தீங்களா..?