தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து: அச்சத்தில் கூச்சலிட்ட பயணிகள் – காரணம் என்ன?

அரசுப் பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் நடத்துநர் பேருந்தை இயக்கினார். இதனால் பயத்தில் பேருந்தை நிறுத்தி இறங்கிய பயணிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதியிலிருந்து புதுச்சேரிக்கு தடம் எண் 212 இயக்கப்படுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் வந்த அரசுப் பேருந்தை ஓட்டுநர் தரணியேந்திரன் இயக்கி வந்தார். இந்நிலையில், 46 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி வருவதற்குள் பல்வேறு இடங்களில் தாறுமாறாக இயக்கபட்டதால் சந்தேகம் அடைந்த பயணிகள் பேருந்தை இயக்கிய நடத்துநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
image
அதுவரை பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் குடிபோதையில் பயணிகள் இருக்கையில் அமர்ந்து கொண்டு வருவதை பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வந்தவாசி நகர பகுதிக்குள் பேருந்து வந்த உடன் பேருந்தை நிறுத்தக்கோரி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கூச்சலிட்டதால் நடத்துநர் பேருந்தை வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நிறுத்திவிட்டார்.
image
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி போலீசார், பேருந்தில் வந்திருந்த பயணிகளை சமாதானம் செய்து வேறு மாற்று அரசு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் பேருந்து நடத்திநரிடம் உரிய விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.