ஐந்து நாள்களுக்கு கனமழை தான்: உங்க ஊர் லிஸ்டுல இருக்கான்னு பாருங்க!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஐந்து தினங்களுக்கு எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (22.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்
கனமழை
பெய்ய வாய்ப்புள்ளது.

23.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25.08.2022 மற்றும் 26.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ACS மருத்துவக் கல்லூரி ARG (காஞ்சிபுரம்) 8, பண்ருட்டி (கடலூர்), ஆண்டிப்பட்டி (மதுரை) தலா 7, வலங்கைமான் (திருவாரூர்), சென்னை விமான நிலையம் (சென்னை) தலா 6, செய்யூர் (செங்கல்பட்டு), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), DGP அலுவலகம் (சென்னை), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்) தலா 5, அம்பத்தூர் (திருவள்ளூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்), தரமணி ARG (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), வாடிப்பட்டி (மதுரை), பூந்தமல்லி (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்) , மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) தலா 4,

திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), திருச்சி விமான நிலையம் (திருச்சி), கலவை AWS (இராணிப்பேட்டை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), எம்ஜிஆர் நகர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), செய்யார் (திருவண்ணாமலை), பொன்மலை (திருச்சி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திருப்பத்தூர் (சிவகங்கை), திருவையாறு (தஞ்சாவூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), வானமாதேவி (கடலூர்), ஈச்சன்விடுதி, அயனாவரம் (சென்னை), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), நந்தனம் ARG (சென்னை) தலா 3,

சோழிங்கநல்லூர் (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்), கீரனூர் (புதுக்கோட்டை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), நன்னிலம் (திருவாரூர்), மரக்காணம் (விழுப்புரம்), பெரம்பூர் (சென்னை), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), ஈரோடு (ஈரோடு), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), துவாக்குடி (திருச்சி), கறம்பக்குடி (புதுக்கோட்டை), திருப்போரூர் (செங்கல்பட்டு), கொடவாசல் (திருவாரூர்), நாமக்கல் (நாமக்கல்), ஆலந்தூர் (சென்னை), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர் மாவட்டம்) தலா 2,

திருவள்ளூர் (திருவள்ளூர்), தளி (கிருஷ்ணகிரி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), சிதம்பரம் AWS (கடலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), கும்பகோணம் (தஞ்சாவூர்), பொன்னை அணை (வேலூர்), சிதம்பரம் (கடலூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), திருத்தணி PTO (திருவள்ளூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), நீடாமங்கலம் (திருவாரூர்), திண்டிவனம் (விழுப்புரம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), குன்னூர் PTO (நீலகிரி), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), திருச்சி நகரம் (திருச்சி), மேட்டூர் (சேலம்), புள்ளம்பாடி (திருச்சி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஓமலூர் (சேலம்), திருப்புவனம் (சிவகங்கை), உளுந்தூர்பேட்டை (விழுப்புரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பெருந்துறை (ஈரோடு), பூதலூர் (தஞ்சாவூர்), திரூர் KVK (திருவள்ளூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

22.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

23.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

24.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

25.08.2022: லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

26.08.2022: லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.