புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் என்.ரங்கசாமி,தாக்கல் செய்தார். நிகழாண்டு ரூ.10,670 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் தாக்கல் செய்தார்.
முக்கிய அறிவிப்புகள்:
* புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் ஆயிரம் வழங்கப்படும்.
* புதுச்சேரி மாநிலத்தில் கால்நடை மையம், காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும்,
* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்து அரசுப் பள்ளிகளில் பொலிவுறு வகுப்புகள் அமைக்கப்படும்.
* புதுச்சேரியில் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும்.
* மீனவ கிராமங்களில் மிதக்கும் படகுத் துறை அமைக்கப்படும்.
* காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி, ரூ.80 கோடியில் புதிய அரசு மருத்துவமனை கட்டப்படும்.
* எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு வழங்கும் தொகை ரூ.2 கோடியாக உயர்வு.
* இந்த ஆண்டு முதல் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.
* குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் நடத்தப்படும் குறைதீர்ப்பு கூட்டங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளதால், குறைதீர்ப்பு கூட்டத்தை அதிகளவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
* உர விற்பனை அதிகரிக்க காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்கப்படும்..
* புதுவை எல்.ஆர்.பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு இளைஞர் நலன் பிரிவு, தனி விளையாட்டுத் துறையாக துவங்கப்படும்.
இதையும் படிக்க: அமித்ஷாவை நேரில் சந்தித்த ஜூனியர் என்.டி.ஆர்… அரசியலில் களமிறங்குறாரா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM