சாதி, மதம் மற்றும் நிதி நிலை இவற்றிற்கு அப்பாற்பட்டது திறமை. பலரின் கனவை நனவாக்க பயன்படும் திறமை, உலகின் எந்த எல்லைக்கும் செல்ல பயன்படும் ஒரு ஆயுதமாக உள்ளது.
இன்றும் தங்களது திறமையால் உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர் பதவிகளை வகிக்கும் இந்திய இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் இருந்து செல்லும் இளைஞர்கள் அதிகம்.
அப்படி சென்று இன்று உலகின் டெக் ஜாம்பவான்களிடம் பணிபுரியும், இந்திய இளைஞர்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஏன் வாடகை ஒப்பந்தம் 11 மாதம் மட்டும் செய்யப்படுகிறது தெரியுமா..?
டெஸ்லா
திறமைக்கு வயது என்பதும், எந்த நாடு என்பதிலும் பாகுபாடு இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் இதான் இது. உத்தரகாண்டினை சேர்ந்த யஷ்வந்த் சவுத்ரி, சிறுவயதில் இருந்தே சிறப்பாக பணியாற்றி வருபவர். இவர் சர்வதேச அளவில் மிகப்பெரிய மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா ஜிகாவில் பணிபுரிகின்றார். இவரின் வயது 24 தான். இவரின் சம்பளம் 23 கோடி ரூபாயாகும். இவர் ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஜிகாவில் சீனியர் மேனேஜர் பதவியில் உள்ளார்.
எல்பியு மாணவர்
லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டியில் பிடெக் படித்த மாணவரான யாசிர் முகமது 3 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலை வாய்ப்பினை பெற்றுள்ளார். கேரளாவினை சேர்ந்த இந்த கணினி பொறியல் மாணவர், ஜெர்மன் மல்டி நேஷனல் நிறுவனத்தின் பணியில் சேர்ந்துள்ளார். அதுவும் உலகமே கொரோனா காலத்தில் முடங்கியிருந்த நிலையில் கிடைத்த வாய்ப்பாகும்.
உத்தரகாண்ட் விவசாயி மகன்
குவஹாத்தி ஐஐடியில் இரண்டாம் ஆண்டு எம்டெக் படித்து வரும் மாணவராக இருக்கும் ரோஹித் நேகி, உபெர் நிறுவனத்திடம் இருந்து 2.05 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலை சலுகையினை பெற்றுளார். 22 வயதான இவர், தனது முதுகலைப்படிப்பு முடிந்த பிறகு உபெர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணிபுரிவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் அடிப்படை சம்பளம் 96 லட்சம் ரூபாயாகும். சிடிசி 2.05 கோடி ரூபாயாகும். இவரின் தந்தை ஒரு விவசாயி ஆவார்.
அமேசானில் பாட்னா இளைஞருக்கு வேலை
கடின உழைப்புக்கு என்றுமே ஒரு பரிசு உண்டு என்பதை அபிஷேக் குமாரின் வெற்றியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பாட்னாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படித்து வரும் அபிஷேக், 1.5 கோடி ரூபாய் சம்பளத்தில் அமேசானில் வேலையினை பெற்றுள்ளார்.
கூகுளில் அகமதாபாத் இளைஞர்
அலகாபாத்தில் உள்ள இந்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப கழகத்தில் எம்டெக், இறுதியாண்டு படிக்கும் மாணவரான பிரதம் பிரகாஷ் குப்தா, கூகுள் நிறுவனத்திடம் இருந்து 1.4 கோடி ரூபாய் சம்ப்ளாத்தில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளார். இது மாதத்திற்கு சுமார் 11. 6 லட்சம் ரூபாய் சம்பளமாகும். கூகுளின் லண்டன் கிளையில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
கூகுளில் மும்பை மாணவர்
அப்துல்லா கான் என்ற பொறியியல் மாணவர் மும்பையை சேர்ந்தவர். இவர் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவரின் சம்பளம் ஆண்டுக்கு 1.2 கோடி ரூபாயாகும். இவரது கல்லூரியில் கேம்பஸ் நட்வடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பே இவர் பணிக்காக தேர்தெடுக்கப்பட்டார்.
அங்கன்வாடி பணியாளரின் மகன்
இன்றைய பல இளைஞர்களின் கனவு வேலையாக இருக்கும் மூன்று நிறுவனங்களில் பிசாக் மொண்டல் வேலை வாய்ப்பினை பெற்றார். இவர் அமேசான் மற்றும் கூகுள் என இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போதிலும், லண்டனில் கிடைத்த பேஸ்புக்கில் தனது பணியினை தொடங்கியுள்ளார். இவரின் வருடாந்திர சம்பளம் 1.8 கோடி ரூபாயாகும். இவரின் தாயார் ஒரு அங்கன் வாடி பணியாளர் ஆகும்.
இந்திய நிறுவனத்தில் வேலை
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலரும் வேலையின்மையால் தவித்த காலத்தில், பாட்னாவினை சேர்ந்த இந்திய தொழில் நுட்ப கழக்கத்தில் உள்ள ஐஐடி-யில் பிடெக் மாணவர், டி இ ஷா இந்தியன் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 47 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலையினை பெற்றார். இது இந்தியாவில் உயர்ந்த சம்பளமாகும்.
ஆட்டோ டிரைவரின் மகள்
கொரோனா காலத்தில் பலரும் வேலையிழந்து தவித்து வந்த காலத்தில், சம்பள குறைப்பினை எதிர்கொண்ட காலத்தில், கோலப்பூரை சேர்ந்த அம்ருதா கரண்டே, 41 லட்சம் ரூபாய் சம்பளத்தில் அடோப் நிறுவனத்தில் இருந்து பணி வாய்ப்பினை பெற்றார். இவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் போது கோலாப்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 4ம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக படித்துக் கொண்டிருந்தார்.
நாக்பூரை சேர்ந்த சிறுவன்
நாக்பூரை சேர்ந்த 15 வயது சிறுவன் வேதாந்த் டியோகேட், நியூ ஜெர்சியில் உள்ள ஒரு விளம்பர நிறுவனம் ஆண்டுக்கு 33 லட்சம் ரூபாய் சம்பளத்தியில் அவருக்கு பணியினை வழங்கியது. எனினும் அவரின் வயது காரணமாக அதனை திரும்ப பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
அமேசானில் விவசாயி மகன்
அவ்னீஷ் சிகாரா தனது பிடெக் கல்லூரி கட்டணத்தினை டியூசன் எடுத்து செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று அவருக்கு அமேசானில் 67 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இவரின் தந்தை ஒரு விவசாயி மற்றும் ஓட்டுனராவர்.
பாட்னா பெண்
மற்றொரு பொறியியல் பட்டதாரியான பாட்னாவை சேர்ந்த சம்ரிதி யாதவ் என்ற பெண், கூகுள் நிறுவனத்தில் 1.10 கோடி ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். பிப்ரவரி 14, 2022 அன்று கூகுளில் பணியில் சேர்ந்தவர்.
எலக்ட்ரிஷியன் மகன்
எலக்ட்ரிஷியனின் ஒருவரின் மகனான முகமது அமிர் அலி, 1 லட்சம் டாலர் சம்பளத்தில், அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் டிப்ளமோ படிப்பினை மட்டுமே படித்துள்ளார்.
Talents from small towns and their work at tech giants
Talents from small towns and their work at tech giants/லட்சம் முதல் கோடிக் கணக்கில் சம்பளம்.. சிறு நகர திறமைசாலிகளும் அண்டை நாட்டு வேலைகளும்..!