Bilingual Policy in Tamil Nadu: சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடந்த ஜேப்பியார் பல்கலைக்கழக துவக்க விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு துவங்கி வைத்தார். நிகழ்ச்சி மேடையில் பேசும் போது, திராவிட மாடல் ஆட்சியில் தான் பெண்களுக்கான கல்வி மேம்படுத்தப்பட்டது. பெரியார் அண்ணா வழியில் தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்படுத்தப்படும் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஜேப்பியார் பல்கலைகழக வேந்தர் ரெஜினா, சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ் அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சி 15 வது மண்டல கூட்டத் தலைவர் மதியழகன், பல்வேறு பல்கலைக்கழக வேந்தர்கள், துணைவேந்தர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக துவக்க விழா நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது,
பெரியார் அண்ணா வழியில் தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்படுத்தப்படும் எனவும், அவரவர் தாய்மொழியில் அவரவர் படிப்பது அவர்கள் விருப்பம், ஆனால் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் ஆங்கிலம் மட்டுமே முக்கிய கல்வி பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்று கூறினார்
இதுகுறித்து பல்கலைக்கழகங்களில் இரு மொழி கொள்கை சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க அரசு சார்பாக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களில் இந்த குழு ஆய்வு மேற்கொள்ளும் எனவும் கூறினார்.
மேலும் திராவிட மாடல் ஆட்சியில் தான் பெண்களுக்கான கல்வி மேம்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தான் தமிழக முதல்வர் தொடர்ந்து பெண்கள் கல்வி மேம்பட அரசு கல்லூரியில் பயின்ற மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகத்தான திட்டத்தை கொண்டு வந்தார். பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த பெண் கல்வியை திராவிட மாடல் ஆட்சி தான் மேம்படுத்தி உள்ளதாகவும், கல்வியிலும் வேலைவாய்பிலும் மட்டும் உங்களை தகுதி படுத்திக் கொள்ளாமல் நீங்களும் தொழில் முனைவோர்களாக மாறி உங்களால் பல பேருக்கு வேலை வாய்பு அமைத்திட தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவுரை வழங்கினார்.