சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே முக்கிய கல்வி பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பெரியார், அண்ணா வழியில் தமிழ்நாட்டில் இருமொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் என்றும் அவரவர் தாய்மொழியில் அவரவர் படிப்பது அவர்களது விருப்பம் என்றும் சென்னை ஜேப்பியார் கல்லூரி நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி உரையாற்றினார்.