டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது அரசின் கொள்கை விவகாரம்தானே என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவில் ராமேஸ்வரம் தீவிற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடலில் காணப்படும் மணல் திட்டுகள் ராமர் பாலம் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் மத நம்பிக்கையின் அடிப்படையில் சில கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட அதை தற்காலத்தில் நீதிமன்றங்களின் வாயிலாகவும் தீர்த்து கொள்ளவும் முயற்சிகள் நடக்கின்றனர். இதனால், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் எனவும், அது இந்துக்களின் நம்பிக்கை என்ற அடிப்படையில் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பதில் தாங்கள் தலையிட வேண்டுமா எனவும், இது அரசின் கொள்கை விவகாரம் தானே என்று நீதிபதிகள் கேள்வி கேட்டிருக்கின்றனர். அறிவியலுக்கும், நம்பிக்கைக்கும் இடையிலான வாத பிரதிவாதங்களால் அரசியலாக மாறி நிற்கிறது இந்த விவகாரம். ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தி உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்ததுள்ளது.