வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.
கடந்த சில அமர்வுகளாகவே சற்று ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று டாலரின் மதிப்பு ஏற்றம், பத்திர சந்தையில் ஏற்ற என பல காரணிகளுக்கு மத்தியில் சரிவினைக் கண்டுள்ளது.
குறிப்பாக ஜாக்சன் ஹோல் சிம்போசியத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை கவனமுடன் இருக்க தூண்டியுள்ளது.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா வாங்கிய கடைசிப் பங்கு இதுதான்.. 2 நாளில் 50% உயர்வு..!
அதிக ஏற்ற இறக்கம்
இதன் காரணமாக இந்திய சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமான காணப்பட்டது. இதற்கிடையில் இந்திய சந்தையில் வரவிருக்கும் வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால், இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதுவும் சந்தையில் ஏற்ற இறக்கத்தினை அதிகரிக்கலாம்.
ஓவர் பாட் லெவலில் இன்டெக்ஸ்
இன்டெக்ஸ்கள் ஓவர் பாட் லெவலில் இருப்பதால் சந்தையில் செல்லிங் அழுத்தமும் காணப்பட்டது. ஆசிய சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், இன்று இந்திய சந்தைகள் பலத்த சரிவில் காணப்பட்டன. எனினும் உள்நாட்டு முதலீட்டாளர்களால் சந்தையில் ஏற்பட்ட பெரியளவிலான சரிவு தடுக்கப்பட்டது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 பங்குகளில் ஐடிசி, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டன. மற்ற பங்குகள் அனைத்துமே சரிவில் தான் காணப்பட்டன. குறிப்பாக டாடா ஸ்டீல் 4.5%மும், ஏசியன் பெயிண்ட்ஸ் 3.5% சரிந்தும், விப்ரோ, சன் பார்மா, எல் & டி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் 3% சரிவினைக் கண்டும், அல்ட்ராடெக் சிமெண்ட் , பஜாஜ் பின்செர்வ், கோடக் மகேந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் 2% மேலாக சரிவினைக் கண்டுள்ளன.
இன்றைய சந்தை நிலவரம்?
சென்சென்ஸ் 872 புள்ளிகள் அல்லது 1.46% சரிவினைக் கண்டு, 59,000 புள்ளிகளுக்கு கீழாக முடிவடைந்துள்ளது. இது 58,773.87 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி 50 267.8 புள்ளிகள் சரிவினைக் கண்டு, 17,490.70 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இன்டெக்ஸ்கள் சரிவு
இன்றைய வர்த்த அமர்வில் அனைத்து இன்டெக்ஸ்களும் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்துள்ளன. நிஃப்டி மெட்டல் 3% மேலாகவும், நிஃப்டி ஆட்டோ, ரியால்டி, பொதுத்துறை வங்கிகள், நிதி சேவைகள் என பலவும் 2% மேலாக சரிவினக் கண்டுள்ளன.
சந்தை மதிப்பு
இதற்கிடையில் பிஎஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 273.99 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த இரண்டு அமர்வுகளில் மட்டும் 6.53 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளன.
சரிவுக்கு என்ன காரணம்
அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இந்திய சந்தையில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவின் பொருளாதாரம் குறித்தான அச்சம், ஃபெடரல் வங்கி கூட்டம் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இன்று டாலரின் மதிப்பானது பெரியளவில் மாற்றமின்றி 108 என்ற லெவலில் காணப்பட்டது.
ஜாக்சன் ஹோல் சிம்போசியம்
அமெரிக்காவின் ஜாக்சன் ஹோல் சிம்போசியத்தில் ஆகஸ்ட் 25 – 27 அன்று நடக்கவுள்ள கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மீண்டும் நாணய கொள்கைகளில் இறுக்கம் இருக்குமா? என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. ஒரு புறம் பணவீக்கமும், மறுபுறம் வளர்ச்சியும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன. ஆக இவை இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டிய நிலையில் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளனர்.
எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி
எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி நடப்பு வாரத்தில் நடக்கவுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்ய நினைக்கலாம் அல்லது அடுத்த கான்ட்ராக்டில் ரோல் ஓவர் செய்யலாம். இதனால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். குறிப்பாக சில்லறை முதலீட்டாளர், அன்னிய முதலீடுகள் என பலவும் வெளியேறி பின்னர் அதிகரிக்கலாம்.
ஆசிய சந்தைகளின் நிலை
ஆசிய சந்தைகளில் இன்று பெரியளவில் மாற்றம் இல்லை என்றாலும், பல குறியீடுகளும் ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்துள்ளன. இதுவும் இந்திய சந்தையில் நடந்த குழப்பத்திற்கு ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.
Sensex crashed 59,000 below: 4 key reason behind the market crash
Sensex crashed 59,000 below: 4 key reason behind the market crash/59,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. 4 முக்கிய காரணங்கள்!