மும்பை: சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது பத்ரா சால் நில முறைகேடு வழக்கு பதியப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சஞ்சய் ராவத் கடந்த ஜூலை 31ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை கடந்த 4ம் தேதி வரை அமலாக்கத்துறையின் காவலில் வைக்க உத்தரவிட்டது. அதன் பிறகு, கடந்த 8 மற்றும் 22ம் தேதி (இன்று) வரை அமலாக்கத்துறை கஸ்டடி காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றுடன் அமலாக்கத்துறை கஸ்டடி முடிந்த நிலையில், மும்பை சிறப்பு பிஎம்எல்ஏ நீதிமன்றம் முன் சஞ்சய் ராவத் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் கஸ்டடி காவல் நீடிப்பு வேண்டும் என்று கோரப்பட்டது. அதையடுத்து செப்டம்பர் 5ம் தேதி வரை கஸ்டடி காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.