இந்திய பங்கு சந்தையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று பலத்த சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. குறிப்பாக சென்சென்ஸ் 872 புள்ளிகள் அல்லது 1.46% சரிவினைக் கண்டு, 58,773.87 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி 50 267.8 புள்ளிகள் சரிவினைக் கண்டு, 17,490.70 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் இரண்டு நாட்களில் முதலீட்டாளர்கள் 6.57 லட்சம் கோடி ரூபாயினை இழப்பினைக் கண்டுள்ளது.
கடந்த இரண்டு அமர்வுகளில் மட்டும் சென்செக்ஸ் 1524.13 புள்ளிகள் குறைந்து அல்லது 2.52% சரிவினைக் கண்டுள்ளது.
தைவான்: 7 பேர் மீது தடை விதித்த சீனா.. இனி என்ன நடக்கும்..?
ரூ.6.57 லட்சம் கோடி இழப்பு
பெரும்பாலான மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை கடுமையாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் சந்தைகள் கடுமையான தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. இந்த பலவீனமான சந்தைக்கு மத்தியில் பி எஸ் இ சென்செக்ஸ்-ல் உள்ள பங்குகளின் சந்தை மதிப்பு, 6,57,758.04 கோடி ரூபாய் குறைந்து, 2,73,95,002.87 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
வலுவான ஏற்றம்
ரூபாயின் மதிப்பு சரிவு, வர்த்தக பற்றாக்குறை மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய்-யின் ஏற்ற இறக்கம் ஆகியவை, பொருளாதாரம் மற்றும் பங்கு சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
எனினும் வலுவான பொருளாதார மீட்சி, பொருட்களின் விலைகள் சரிவு, பணவீக்கமும் இலக்கினுள் உள்ளது, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இன்னும் சிறப்பாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏன் இந்த திருத்தம்
சமீபத்திய எழுச்சிக்கு பிறகு சந்தையில் ஒரு திருத்தம் இருக்கிறது. இது அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் குறித்து எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டாலரின் மதிப்பில் ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இது இந்திய சந்தையில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வங்கித்துறை, உலோகம், ஐடி துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சில துறைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது சந்தையில் பெரும் சரிவினை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் சரியலாம்
எப்படியிருப்பினும் வரவிருக்கும் நாட்களில் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச சந்தை, கச்சா எண்ணெய் விலை, தேவை சரிவு, தாய்வான் சீனா பிரச்சனை, அமெரிக்கா – சீனா பதற்றம், டெக்னிக்கலாகவும் சந்தை சரிவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. கூடுதலாக சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆக இவை அனைத்துமே சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
market crashing wipes out over Rs.6.57 lakh crore of investors wealth in 2 days
market crashing wipes out over Rs.6.57 lakh crore of investors wealth in 2 days/2 நாளில் ரூ6.57 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. இன்னும் பிரச்சனை காத்திருக்கு.. உஷாரா இருங்க!