கணவரை கொல்ல காதலனுடன் சேர்ந்து ஸ்கெட்ச் – தான் விரித்த வலையில் தானே சிக்கிய பெண்!

காதலனுடன் சேர்ந்துகொண்டு கணவனை கொலைசெய்ய திட்டம் தீட்டிய அந்த பெண், தான் விரித்த வலையில் தானே சிக்கிக்கொண்ட சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. நடந்தது என்ன? பார்க்கலாம்.
பீன்யா அருகேயுள்ள தொட்டபிதரக்கல்லு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். கார் ஓட்டுநரான இவரது மனைவி பெயர் அனுபல்லவி. அனுபல்லவிக்கு ஹிமாவந்த் குமார் என்ற நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதற்கு அவரது தாயார் அம்மோஜம்மாவும் ஆதரவு அளித்து வந்துள்ளார். இந்நிலையில் அனுபல்லவியும் அவரது காதலன் ஹிமாவந்த் குமாரும் சேர்ந்துகொண்டு நவீன்குமாரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். அதற்கு அம்மோஜம்மாவும் உடந்தை. அதன்படி ஹரிஷ், நாகராஜு மற்றும் முகிலன் ஆகிய 3 பேருக்கு ரூ. 2 லட்சம் கொடுத்து நவீன்குமாரை கடத்திச்சென்று கொலைசெய்வதே இவர்கள் திட்டம்.
இவர்கள் திட்டத்தின்படி, ஜூலை 23ஆம் தேதி ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் நவீன்குமாரை கடத்தி தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். ஆனால் அந்த மூன்று பேருக்கும் நவீன்குமாரை கொல்ல போதிய தைரியம் இல்லாததால் அவருடன் சேர்ந்துகொண்டு குடித்து பார்ட்டி செய்ததுடன் அவரிடம் நட்பாகி உண்மையை போட்டு உடைத்துள்ளனர்.
image
கடத்தல்காரர்கள் தங்கள் திட்டப்படி கணவனை தீர்த்துக்கட்டினார்களா என்பதை தெரிந்துகொள்ள அனுபல்லவியும், ஹிமாவந்த் குமார் போன் செய்துள்ளனர். உடனே ஹரிஷ் கூட்டாளிகள் நவீன்குமார் மீது கெட்ச்-அப்பை ஊற்றி அதை புகைப்படம் எடுத்து அவர்களுக்கு அனுப்பிவிட்டனர்.
அந்த புகைப்படங்களை பார்த்து பயந்துபோன ஹிமாவந்த் குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கிடையே நவீன்குமாரின் தந்தை தனது அண்ணன் காணாமல் போய்விட்டதாக ஆகஸ்ட் 2ஆம் தேதி போலீஸில் புகார் அளித்தார். ஆனால் ஆகஸ்ட் 6ஆம் தேதி நவீன்குமார் தாமாகவே வீட்டிற்கு வந்துவிட்டார். பின்பு அவர் தனது மனைவியின் திட்டம் மற்றும் தனக்கு நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
அவரது புகாரின்பேரில் அனுபல்லவி மற்றும் ஹிமாவந்த் குமாரின் செல்போன்களை பரிசோதித்த போலீசார் உண்மையை அறிந்துகொண்டனர். அனுபல்லவி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த அம்மோஜம்மாவையும் சேர்த்து தற்போது கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.