ஒரு ரூபாய் சில்லரை கேட்ட சினிமா கவிஞர்… அவர் எழுதிய ஒரு ரூபாய் ஹிட் பாடலை குறிப்பிட்ட கடைக்காரர்

சென்னை: தமிழ் சினிமா அவ்வப்போது இசையமைப்பாளர் பாடலாசிரியர் அடங்கிய சில இசை கூட்டணிகளை சந்திக்கும்.

அந்த வகையில் தற்சமயம் பிரபலமாக இருப்பது இசையமைப்பாளர் இம்மான் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி கூட்டணி தான்.

மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்குராஜா, சீமா ராஜா, கும்கி, கயல், தொடரி என்று பல படங்களில் இருந்த ஹிட் பாடல்களை இந்த கூட்டணி கொடுத்துள்ளது.

பல்லாங்குழியின் வட்டம்

சினிமா பாடல் எழுதலாம் என்று சென்னைக்கு வந்த யுகபாரதிக்கு முதன் முதலில் கிடைத்த வாய்ப்பு தான் ஆனந்தம் திரைப்படத்தில் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்பாடல் எழுதும் வாய்ப்பு. யுக பாரதியின் கவிதைகள் இயக்குநர் லிங்குசாமிக்கு பிடித்துப் போகவே அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார். அந்தப் படத்திலேயே மிக பிரபலமானது அந்தப் பாடல்தான்.

 வாய்ப்பில்லாத காலம்

வாய்ப்பில்லாத காலம்

முதல் பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்தவுடன் இனிமேல் தமிழ் சினிமாவில் நாம்தான் கொடிகட்டி பறக்க போகிறோம் என்ற எண்ணத்தில் இருந்த யுகபாரதிக்கு அடுத்த ஓராண்டிற்கு எந்த வாய்ப்பும் அமையவில்லையாம். மிகவும் மன வருத்தத்தில் இருந்தவருக்கு மீண்டும் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தவர் இயக்குநர் லிங்குசாமிதான். ஆனால் அதிலும் பிரச்சனைகளை சந்தித்துதான் பின்னர் வெற்றி பெற்ற பாடலாசிரியராக இப்போது வலம் வருகிறார்.

 வித்யாசாகர் அனுகுமுறை

வித்யாசாகர் அனுகுமுறை

ரன் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் யுகபாரதியை அழைத்துச் சென்றிருக்கிறார் லிங்குசாமி. இவர் என்ன பாடல் எழுதியிருக்கிறார் என்று கேட்க பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலைச் சொல்ல எந்தவிதமான ரியாக்க்ஷனும் கொடுக்கவில்லையாம் அவர். அறிமுகத்திலேயே வித்யாசாகர் ஆளுமை தொணியில் பேசியது தன்னை மட்டும் தட்டுவது போலவே யுகபாரதிக்கு தோன்றி பாடல் எழுத மாட்டேன் என்று வந்துவிட்டாராம். அதன் பின்னர் லிங்குசாமி சமாதானப்படுத்தி எழுதிய பாடல் தான் காதல் பிசாசே. பாடலை பார்த்தவுடன் நான் உங்களை அப்படி பேசவில்லை என்றால் இப்படி ஒரு வித்யாசமான பாடல் வந்திருக்காட்து என்று பாராட்டியது மட்டுமில்லாமல் அதன் பிறகு தனது அனைத்து படங்களிலும் கிட்டத்தட்ட 300 பாடல்கள் எழுத வாய்ப்பளித்தாராம் வித்யாசாகர்.

 கடைக்காரர்

கடைக்காரர்

இந்நிலையில் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் ஹிட்டான சமயம் தான் குடியிருந்த அப்பார்ட்மெண்ட் வாசலில் ஒரு கடை இருந்ததாம். அங்கு பொருட்களை வாங்கிக்கொண்டு மீதம் ஒரு ரூபாய் சில்லறையை கடைக்காரரிடம் கேட்க, யுகபாரதியிடம்,”இந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் பையன் ஏதோ ஒரு ரூபாயை வைத்து பாடல் எழுதி இருக்கிறானாம்” என்று வித்தியாசமான தொணியில் கூற தன்னை பாராட்டுகிறாரா இல்லை திட்டுகிறாரா என்று புரியாமல் தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து வந்துவிட்டாராம். இதே போல மன்மதராசா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனபோது இவர்தான் அந்தப் பாடலை எழுதினார் என்று தெரியாமல் இவரை வைத்துக் கொண்டே இப்படி எல்லாம் பாடல்களை எழுதி சமூகத்தை நாசம் செய்கிறார்கள் என்று கூறுவார்களாம். இவரும் ஆமாம் என்பது போல் தலையாட்டிவிட்டு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிடுவார் என்று யுகபாரதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.