வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அசூன்சியான்-தென் அமெரிக்க நாடான பராகுவேயில், மஹாத்மா காந்தியின் மார்பளவு சிலையை, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆறு நாள் அரசு முறை பயணமாக தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார். அங்குள்ள பராகுவே நாட்டில், மஹாத்மா காந்தியின் மார்பளவு சிலையை நேற்று முன் தினம் திறந்து வைத்தார்
.இது குறித்து சமூகவலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவு:பராகுவேயின் அசூன்சியான் நகரில், மஹாத்மா காந்தி சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன். நகரின் பிரதான பகுதியில் சிலையை நிறுவிய அசூன்சியான் மாநகராட்சியின் செயல் பாராட்டுக்குரியது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் போது இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒற்றுமையின் பிரதிபலிப்பாக இதை காண்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
சிலையை திறந்து வைத்த பின், ஜெய்சங்கர் 200 ஆண்டுகளுக்கு முன் பராகுவேயின் விடுதலை போராட்டம் துவங்கிய இடமான, ‘காசா டி லா இண்டிபெண்டென்சியா’ என்ற வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement