புதுடில்லி: “வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவரவர் விருப்பம் என தேர்தல் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆனால், ஆதாரை இணைக்கவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என பூத்அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர்,” என, திரிணமுல்காங்., செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே கூறியுள்ளார்.அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுதும் நடக்கிறது. இதற்கென 6-பி என்ற படிவத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான தேர்தல் நடைமுறை சட்ட திருத்தம் 2021 டிசம்பரில் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது அவரவர் விருப்பம்தான்; கட்டாயமில்லை என கூறியிருந்தார். ஜூலை 4ம் தேதி தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலும் இதே கருத்தை கூறியுள்ளது.ஆனால், பூத் அதிகாரிகள், நாடு முழுதும் கட்டாயப்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கின்றனர். இல்லையென்றால், வாக்காளர் பெயர் நீக்கப்படும் என மிரட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement