விப்ரோ-வை தொடர்ந்து இன்போசிஸ்.. கடுப்பில் ஐடி ஊழியர்கள்..!

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், ஜூன் காலாண்டுக்கான ஊழியர்களின் சராசரி வேரியபிள் பே ஊதியத்தை 70 சதவீதமாகக் குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐடி நிறுவனங்கள் 10 லட்சம் 20 லட்சம் எனப் பெரிய தொகையைச் சம்பளமாகக் கொடுத்தாலும் இதில் பெரும் தொகையை வேரியபிள் பே- ஆகக் கொடுக்கிறது. வேரியபிள் பே பிரிவில் இருக்கும் 2 லட்சமோ அல்லது 4 லட்சமோ அதை 4 காலாண்டுகளுக்கு ஊழியரின் செயல்திறன் அடிப்படையில் அளிக்கப்படும்.

இந்தத் தொகையைத் தான் தற்போது இன்போசிஸ் குறைத்துள்ளது. வேரியபிள் பே குறைப்பு மூலம் ஐடி ஊழியர்களைப் புதிய வேலைவாய்ப்புகளைத் தேடுவதற்குத் தள்ளும்.

இன்போசிஸ் ஒரிஜினல் கேங்ஸ்டர்.. பதறிப்போன நந்தன் நிலேகனி..!

 விப்ரோ நிறுவனம்

விப்ரோ நிறுவனம்

விப்ரோ நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே நிறுத்துவதாகவும், புதிய மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 30 சதவீத பிடிக்கப்பட்ட பின்பு 70 சதவீத வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது.

மார்ஜின் பிரச்சனை

மார்ஜின் பிரச்சனை

விப்ரோ இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாக மார்ஜின் மீதான அழுத்தம் மற்றும் அதன் ஊழியர்களின் திறன் வெளிப்பாட்டில் மந்த நிலை, தொழில்நுட்பத்தில் முதலீடுகளில் லாபம் அளவு சரிவு ஆகியவற்றின் காரணமாக வேரியபிள் பே தொகை கட் செய்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
 

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

இதேபோல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனங்கள் சில ஊழியர்களுக்குக் காலாண்டு வேரியபிள் பே தொகை ஒரு மாத தாமதத்திற்குப் பின்பு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் யாருக்கும் வேரியபிள் பே தொகையைக் கட் செய்யப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

 இன்போசிஸ்

இன்போசிஸ்

இந்நிலையில் இன்போசிஸ் கடைசியாக ஜூன் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகையைச் சராசரியாக 90 சதவீதத்திற்கு மேல் அளிக்கும், ஆனால் தற்போது இதன் அளவை 70 சதவீதமாகக் குறைத்துள்ளது. கடந்த மாதம் வெளியான ஜூன் காலாண்டு முடிவில் அதிகரிக்கும் செலவுகள் காரணமாக இன்போசிஸ் லாபம் கணிப்பைக் காட்டிலும் 3.2 சதவீதம் மட்டுமே பதிவு செய்தது.

 இன்போசிஸ் மார்ஜின்

இன்போசிஸ் மார்ஜின்

இன்போசிஸ் தனது மார்ஜின் அளவு 21-23 சதவீதமாகத் தான் இருக்கும் எனக் கணித்திருந்தது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக ஜூன் காலாண்டில் மார்ஜின் அளவு 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதை வாயிலாகவே வேரியபிள் பே தொகை 70 சதவீதமாகக் குறைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Infosys reduced variable pay to 70 percent; IT employees started look out for jobs

Infosys reduced variable pay to 70 percent; IT employees started to look out for jobs | விப்ரோ-வை தொடர்ந்து இன்போசிஸ்.. கடுப்பில் ஐடி ஊழியர்கள்..!

Story first published: Tuesday, August 23, 2022, 9:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.