ஆறு மாதங்களாக நடக்கும் உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? பல நாள் கேள்விக்கு கிடைத்த பதில்


உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் சரியாக 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என கூறும் ரஷ்ய தூதர்

பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்து ரஷ்ய தூதா் கென்னடி காடிலோவ் பேசியுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் சரியாக 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
போர் நிறுத்தம் எப்போது ஏற்படும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அது குறித்து ஜெனீவாவுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கான ரஷ்யத் தூதா் கென்னடி காடிலோவ் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், தற்போது நிலவி வரும் கடுமையான சூழலில், ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடினுக்கும் உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கிக்கும் இடையே நேரடியாக பேச்சுவாா்த்தை நடப்பதற்கான வாய்ப்பே இல்லை.

ஆறு மாதங்களாக நடக்கும் உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? பல நாள் கேள்விக்கு கிடைத்த பதில் | Russia Ukraine War Six Months

businesstoday

எனவே, உக்ரைன் போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை.
இப்போதைய சூழலில், இந்தப் போா் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாராலும் கூற முடியாது.

உக்ரைனுக்கு ஆயுதங்களையும் பிற உதவிகளையும் அளித்து, அந்த நாட்டு வீரா்களை ரஷ்யாவுக்கு எதிரா மேற்கத்திய நாடுகள் தொடா்ந்து தூண்டி வருகின்றன.

கடைசி உக்ரைன் சாகும்வரை இந்தப் போரைத் தொடர மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.

எனவே, பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.