தி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மிஷன் நாசா , ஐரோப்பியன் மற்றும் கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட்டிணைந்து நடத்தி வரும் மிஷன் ஆகும். தி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் டிசம்பர் 2021 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. தற்போது பூமியிலிருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த படம் தி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பால் கடந்த ஜூலை மாதம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் வியாழன் கோளில் பொழுது விடிவது, நிலா , பலத்த புயல்காற்று அடிப்பது என அதிசயத்தக்க பல காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக infrared light என்று சொல்லப்படக்கூடிய மனித கண்களுக்கு புலப்படாத கதிர்களால் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளதால் செயற்கையாக நிறங்கள் சேர்க்கப்பட்டு இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது போன்று நாங்கள் வியாழன் கோளை பார்த்ததே இல்லை. இது நம்பமுடியாததாக இருக்கிறது என்று அந்த ப்ரொஜெக்ட்டில் வேலை செய்யும் விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி வீரர்களே கூறுகின்றனர்.
இது குறித்து நாசா கூறும்போது, இந்த படங்கள் வியாழனின் வடக்கு மற்றும் தெற்கு புலங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அங்கு படும் சூரிய வெளிச்சத்தால்தான் பெரிய புயல்காற்று போன்ற அமைப்பு, விடியல் மற்றும் சிவப்பு நிறத்தில் பெரும்புள்ளி போன்று தெரிவது ஆகியவற்றை நம்மால் அந்த படத்தில் காண முடிகிறது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த டெலெஸ்கோப்பின் சிறப்பு என்னவென்றால் 13பில்லியன் வருடங்களுக்கு முன் பூமியை நோக்கி வந்த ஒளியை இதனால் கண்டுபுடிக்க முடியும். அடுத்த 20 வருடங்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் தி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் கண்டுபிடிப்பு கட்டாயம் ஆதிக்கம் செலுத்தும்.
– சுபாஷ் சந்திரபோஸ்