தூக்கத்தில் ஆடு என நினைத்து தவறுதலாக ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட நபர்!

கனவு என்பது பலருக்கும் வரும் இயல்பான ஒன்று, நம் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் சில நினைவுகள் கனவுகளாக வரலாம் அல்லது நாம் கற்பனை கூட கனவாக வரலாம்.  சிலருக்கு என்ன கனவு காண்கிறோம் என்பது நினைவில் இருக்கும், சிலருக்கு அந்த கனவு நினைவில் இருக்காது.  தூங்கும்போது நாம் காணும் கனவுகள் பெரியளவில் ஒருவரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் கனவால் தற்போது ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கானாவின் மத்திய பிராந்தியத்திலுள்ள அசின் ஃபோஸின் என்கிற நகரத்தில் வசித்து வருபவர் 47 வயதாகும் கோஃபி அட்டா.  இவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது கனவில் தனது மனைவிக்கு சமைப்பதற்காக ஆட்டுக்கறியை வெட்டுவதாக நினைத்து அவரது ஆணுறுப்பை தவறுதலாக வெட்டியிருக்கிறார்.

சம்பவத்தன்று கோஃபி அட்டாவின் மனைவி அட்வோ கொனாடு பணி முடிந்து வீடு திரும்பி இருக்கிறார், அப்போது தனது கணவரின் ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  பின்னர் அந்த ரத்தத்தை நிறுத்தும் பொருட்டு தனது கணவருக்கு டயப்பரை வைத்து சுற்றியுள்ளார், அதன் பிறகு உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கிறார்.  காயமடைந்த அட்டா தனது நிலைமை குறித்து அளித்த பேட்டியில், மருத்துவ உதவி வேண்டும், தனக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்.  மேலும் அவருக்கு சிகிச்சை செய்ய கோம்ஃபோ அனோக்யே மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றும் அங்கு சிகிச்சைக்கு நிறைய பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.  நான் இப்போது மருத்துவமனையில் இருக்கிறேன், எனக்கு அங்கு மருத்துவர்கள் நிறைய மருந்துகள் மற்றும் ஊசிகள் செலுத்தினர்.  

 

மேலும் படிக்க | Viral News: 8 மனைவிகளுக்கும் ஒரு அரண்மனை; டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் நபர்!

ஆனால் எனக்கு அப்போது தேவைப்பட்டது எல்லாம் அறுவை சிகிச்சை தான், ஆம்புலன்சில் எரிபொருளுக்கு கொடுக்க கூட என்னிடம் பணம் இல்லை, பின்னர் அவர்களே எனக்கு அறுவை சிகிச்சை செய்ய கோம்ஃபோ அனோக்யே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று கூறியுள்ளார்.  மேலும் தனக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்து பேசியவர், நான் நாற்காலியில் அமர்ந்து ஆழந்த தூக்கத்தில் இருந்தேன், அப்போது சமைப்பதற்காக ஆட்டு இறைச்சியை வெட்டுவதாக வந்த கனவில் நான் தவறுதலாக எனது ஆணுறுப்பை வெட்டியிருக்கிறேன்.  எனது கைக்கு எப்படி கத்தி வந்தது, நான் எப்போது கத்தியை என் கைகளில் எடுத்தேன் என்று எதுவும் எனக்கு நினைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் அவரது ஆணுறுப்பு இணைக்கப்பட்டது, சிகிச்சையளிக்கப்பட்ட ஆறு வாரங்களுக்கு பிறகு அவரது நிலை குணமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | தொடர்ந்து வம்பிழுத்த நாய்க்கு பூனை கொடுத்த பதிலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.