புடினுக்கு நெருக்கமான ஒருவரின் மகள் கார் வெடிகுண்டில் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு உக்ரைன் பெண் பெயர் அடிபடுகிறது.
இந்த சம்பவத்துக்கு ரஷ்யா பழிக்குப் பழி வாங்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது.
புடினுக்கு நெருக்கமானவரும் தத்துவவியலாளரும், எழுத்தாளருமான Alexander Dugin என்பவரது மகளும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான Daria Dugina (29) எனும் இளம்பெண் கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
அந்தக் கார் அவரது தந்தையான Alexanderக்கு சொந்தமானது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட Alexander, கடைசி நேரத்தில் தனது காரில் ஏறாமல் வேறொரு காரில் சென்றுள்ளார். அவரது காரில் அவரது மகள் செல்லும்போது குண்டு வெடிக்க, Daria உடல் சிதறி பலியானார்.
இந்த விடயம் குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ள ரஷ்ய ஜனாதிபதியாகிய புடின், Dariaவின் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவர் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் நேர்மையாக உழைந்தவர், அவர் நாட்டுப்பற்று மிக்கவர் என்றும் கூறி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன் Dariaவுக்கு ரஷ்யாவின் உயரிய விருதகளில் ஒன்றான Order of Courage என்னும் விருதையும் வழங்கி கௌரவித்துள்ளார் புடின்.
இதற்கிடையில், Dariaவின் காரில் வெடிகுண்டு வைத்தவர் என ஒரு உக்ரைன் பெண்ணின் பெயர் அடிபடுகிறது. Natalya Vovk என்ற அந்த உக்ரைன் நாட்டவரான பெண், ஜூலை மாதம் தனது 12 வயது மகளுடன், போலி நம்பர் பிளேட்டுடன் ரஷ்யாவுக்குள் நுழைந்ததாகவும், மாஸ்கோவில் Daria தங்கியிருந்த அதே அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீடு எடுத்துத் தங்கியதாகவும், Daria கொல்லப்படுவதற்குமுன் அவர் பங்குகொண்ட ஒரு நிகழ்ச்சியிலும் Natalyaவும் அவரது மகளும் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், அதற்கு ஆதாரமாக Natalya எல்லை கடக்கும்போது மற்றும் மாஸ்கோவில் Daria தங்கியிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் நுழையும்போது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ள அவரைக் காட்டும் காட்சிகளை ரஷ்ய உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
இப்போது எழுந்துள்ள ஒரே கேள்வி, Dariaவின் மரணத்துக்கு ரஷ்யா பழிக்குப் பழி வாங்குமா, அப்படி பழிவாங்கும் பட்சத்தில் எப்படி பழிவாங்கும் என்பதுதான்!
image – twitter