`பாலியல் புகாருக்குள்ளான நபரின் கீழ் பணியாற்ற முடியாது’- கடிதம் கொடுத்த பிற பேராசிரியர்கள்

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆங்கிலத்துறை தலைவரின் கீழ் பணியாற்ற முடியாது என 17 பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் மீது முதுகலை மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தி, மாணவியின் புகாரில் உண்மை இருப்பதை அறிந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரிக்கல்வி இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
image
அதன் பின் பல நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இவ்விஷயத்தில் கல்லூரி முதல்வர் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக பேராசிரியர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த சூழலில் மாணவிக்கு ஆதரவாக ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பும், பேராசிரியருக்கு ஆதரவாக எஸ்.சி – எஸ்.டி பேராசிரியர்கள் சங்கமும், முதல்வருக்கு ஆதரவாக அரசு கல்லூரி பேராசிரியர்கள் கழகமும் களமிறங்கின.
image
இதனால் கல்லூரியில் இறுக்கமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆங்கிலத் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் (17பேர்) கல்லூரி முதல்வரை சந்தித்து துறைத் தலைவரின் செயல்பாடுகள் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும், அவர் துறைத் தலைவராக இருப்பதை விரும்பவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளனர்.
image
இப்பிரச்னையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏதாவது ஒரு வகையில் இதை முடிவுக்கு கொண்டுவர அரசு ஆர்வம் காட்டாமல் இருப்பது மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளின் நலன்கருதி, அவர்களுக்கு அமைதியான கல்விச்சூழலை ஏற்படுத்தி தர அரசு முன் வர வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.