சமீபத்திய ஆண்டுகளாகவே ஆன்லைன் ஆப் மூலமாக கடன் பெறுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன. அப்படி கடன் கொடுத்து , ஆபாச படங்களை அனுப்பியும் மிரட்டியும் ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது சில தினங்களுக்கு முன்பு தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் மூலம் என்பதை விட மொபைல் மூலம் கடன் கொடுக்கும் ஆப்கள் ஏராளமாக வந்து விட்டன.
இன்றைய காலகட்டத்தில் உங்களுக்கு கடன் வேண்டுமா? என கூறி அடிக்கடி அழைப்புகள் வந்திருக்க கூடும். இனியும் கூட வரலாம். ஆக இந்த கடன் மோசடி வலையில் இருந்து தப்பிக்க நீங்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியமான ஒன்று.
சூரத் – சென்னை சாலை திட்டத்திற்கு முட்டுக்கட்டை.. சுற்றுச்சூழல் அமைச்சகம் நெருக்கடி..!
மோசமான நடவடிக்கை
சமீபத்தில் கடன் கொடுத்தவரை விட்டு விட்டு அவரின் நண்பர்களுக்கு அழைத்து கூறுவது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படி கூட நடக்குமா? என்ற எண்ணம் இருந்து வந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவை சேர்ந்த கடன் வசூலிப்பு கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
தற்கொலைகள் அதிகரிப்பு
சிலர் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு போலீசாரின் உதவியினை நாடினாலும், பலரும் வெளியில் சொல்வதற்கு கஷ்டப்பட்டு கொண்டு தங்களது வாழ்வினை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு செல்கின்றனர். சமீபத்தில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்களும் அதிகளவில் அரங்கேறி வருகின்றன.
டெல்லியில் மோசடி கும்பல்
டெல்லியில் இதுபோன்ற பிரச்சனைகள் பலவும் வரவே, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் கடன் கொடுக்க 100க்கும் அதிகமான மொபைல் ஆப்கள் உள்ளதும், இதன் மூலம் வாடிக்கையாளார்களை மோசடி செய்வதும் அறங்கேறியுள்ளது. ஆரம்பத்தில் இதுபோன்ற ஆப்கள், உடனடியாக சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்களை திருடிக் கொள்கின்றன.
உடனடியாக கடன்
இப்படி சட்ட விரோதமாக திருடப்பட்ட தகவல்கள் சீனா மற்றும் ஹாங்காங் சர்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இன்னும் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளன. பொதுவாக இதுபோன்ற மோசடி ஆப்கள் உங்களது சிபில் ஸ்கோர் என எதையும் பார்ப்பதில்லை. வாடிக்கையாளர்களை கவர, அதிக தகவல்கள் என எதுவும் இல்லாமல் எளிதில் கடன் கொடுக்கின்றன. சொல்லப்போனால் நிமிடங்களில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.
மிரட்டி பணம் பறித்தல்
நாமும் அவசரத்திற்கு பணம் கிடைத்தால் போதும் என எதனையும் சரி பார்ப்பதில்லை. இது ஆர்பிஐயால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமா? என எதனையும் தெரிந்து கொள்வதில்லை.
ஆனால் பணத்தை கொடுத்த பிறகு தான் அவர்களின் சுயரூபமே தெரிய வருகின்றது. இவர்கள் போலி சிம்கார்டுகள் மூலம் கடன் பெற்றவர்களை மிரட்டி பணம் பறித்தல், ஆபாச படங்களை பயனரின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி விடுவோம் என மிரட்டி பல வகையிலும் பணம் பறிக்கின்றனர்.
மரியாதை என்னவாவது?
ஒரு சிலர் சமூகத்தில் தங்களது மரியாதை என்னாவது என்று அஞ்சி கேட்ட பணத்தை கொடுத்து விடுகிண்றனர். இதன் மூலம் சில ஆயிரம் ரூபாய்களுக்கு, பல ஆயிரங்களை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சிலர் இதனை கட்ட முடியாமல் தான் தற்கொலை எண்ணத்தையும் கையில் எடுக்கின்றனர். ஒரு சிலரே துணிந்து காவல் துறையை நாடுகின்றனர்.
கடன் வசூல் வேட்டை
இப்படி சீனாவுக்காக கடன் வசூல் வேட்டையில் இறங்கியுள்ள இந்த கும்பல், இதுவரையில் 500 ல் கோடி ரூபாய் வரையில் பணம் பறித்துள்ளதாக தெரிகிறது. இந்த மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி இதுவரையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஏராளமானவர்கள் சிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவா?
எனினும் இந்தியாவின் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், தற்போது பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் நாடுகளுக்கு இந்த மோடி கும்பல் இடமாற்றம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இந்த மோசடி கும்பல் 5000 – 10,000 ரூபாய் வரையில் கடன் கொடுத்து விட்டு, லட்சக்கணக்கில் செலுத்த கூறுவதாக தெரிகிறது. இப்படி வசூல் செய்வதன் மூலம் ஒரு வங்கிக் கணக்கில் ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் கூட பரிவர்த்தனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பெரும் நெட்வொர்க்
டெல்லியில் மட்டும் அல்ல, கர்நாடகா, மகராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த நெட்வொர்க் பரவியுள்ளதாகவும் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
என்னென்ன ஆப்கள்?
ரைஸ் கேஸ் ஆப் (Raise cash app), பிபி மணி ஆப் (PP money app), ரூபிஸ் மாஸ்டர் ஆப் (Rupees master app), கேஸ் ரே ஆப் (Cash ray app), மொபிபாக்கெட் ஆப் (Mobipocket app), பாபா மணி ஆப் (Papa money app), இன்ஃபினிட்டி கேஸ் ஆப் (Infinity cash app), கிரெடிட் மேங்கோ ஆப் (Kredit mango app) கிரெடிட் மார்வெல் ஆப் (Kredit marvel app), சிபி லோன் ஆப் (CB loan app), கேஸ் அட்வான்ஸ் ஆப் (Cash advance app), ஹெச் டி பி லோன் ஆப் (HDB loan app ), கேஸ் ட்ரீ ஆப் (Cash tree app) ரா லோன் ஆப் (RAw loan app, அண்டர் பிராசஸ் (Under process), மினிட் கேஸ் ஆப் (Minute cash app), கேஸ் லைட் ஆப் (Cash light app), கேஸ் ஃபிஷ் ஆப் (Cash fish app), ஹெச் டி கிரெடிட் ஆப் (HD credit app), ரூபிஸ் லேண்ட் ஆப் (Ruppes land app ), கேஸ் ரூம் ஆப் (Cash room app), ரூபி லோன் ஆப் (Rupee loan app), வெல் கிரெடிட் ஆப் (Well Kredit app)உள்ளிட்ட ஆப்களை போலீசார் பட்டியலிட்டுள்ளனர்.
அலர்ட்டா இருங்க
மொத்தத்தில் கடன் வாங்கும் முன்பு கொஞ்சம் கவனித்து வாங்குவதன் மூலம், இத்தகைய பிரச்சனைகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். சிக்கல்களில் இருந்து தப்பிக்க முடியும். கடன் வாங்கும் முன்பு இது ஆர்பிஐ- ல் அங்கீகரிக்கப்பட்டதா? உள்ளிட்ட விவரங்களை பார்த்து அதன் பின்னர் முடிவு செய்வதே உங்களை மோசடியாளர்களிடம் இருந்து பாதுகாக்க உதவும்.
What to consider while taking loan through online app?
What to consider while taking loan through online app?/ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடன் வாங்குபவரா நீங்க.. எச்சரிக்கையா இருங்க.. இப்படி கூட நடக்கலாம்..!