Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
India vs Zimbabwe 3rd ODI.. இந்திய அணி வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், 3வது போட்டி திங்கள்கிழமை ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 289 ரன்கள் எடுத்தது. 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து வெறும் 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரை வென்றது. இந்திய அணி தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட்டும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்
பொறியியல் படிப்பிற்காக புதிய பாடத்திட்டங்களை நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைகழகம் அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, முதல் 3 செமஸ்டர்களுக்கு, தமிழர் மரபு, அறிவியல் தமிழ், Professional Development, English Lab, Communication lab / Foreign Language ஆகிய 5 புதிய பாடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
திருவாரூர்: பேரளம் அருகே 9ஆம் வகுப்பு மாணவன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் சம்மதிக்காததால் தற்கொலை என தகவல் நேற்று தீக்குளித்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் . தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு அலுவலக உதவியாளர், இருப்பிட உதவியாளர் பணிகளை உருவாக்க தமிழக அரசுக்கு டிஜிபி பரிந்துரைக்கலாம்
கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரிய மனுவை 10 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை கேட்டு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் மனு.
தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, இபிஎஸ் தொடர்ந்த வழக்கு, ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது
சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, 38,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரசுப்பணியில் 92 இடங்களை நிரப்ப, குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2 தனியார் தோல் தொழிற்சாலைகளுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனையினர் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில், பட்டியலின தலைவர்கள் மீதான சாதிய பாகுபாடுகளை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இனிஷியலை தமிழில்தான் எழுத வேண்டும், கையொப்பத்தையும் தமிழில் இட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் பிடிஆர் கார் மீது காலணி வீசிய வழக்கில், கைதான பாஜகவினர் 9 பேரில், 6 பேருக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வில் ஆக. 18 அன்று முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே, இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில், ஓபிஎஸ் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டுமென அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், 157 பேரிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் இன்று, அரசிடம் தாக்கல் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.