ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்-ஐ தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கைப்பற்றினர். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியதால் இது “தலிபான் ஆட்சி 2.0” என்று அழைக்கப்படுகிறது.
முன்னதாகச் செப்டம்பர் 1996 ஆம் ஆண்டுத் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றினர். 1996 முதல் முதல் தாலிபான்கள் காபூல் நகரை அக்டோபர் 2001 வரையில் ஆச்சி இல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 2022 உடன் ஆப்கானிஸ்தான் நாட்டைத் தலிபான்கள் கைப்பற்றி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முழுமையாக முடிந்துள்ளது. இந்த ஒரு வருடத்தில் என்னவெல்லாம் மாறியுள்ளது.
ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடன் வாங்குபவரா நீங்க.. எச்சரிக்கையா இருங்க.. இப்படி கூட நடக்கலாம்..!
பெண்கள் சுதந்திரம்
முந்தைய தலிபான் ஆட்சி, 1990 களில், பெண்களின் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டுத் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, ஆப்கானிஸ்தானில் பெண்களுக்குத் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளன.
பொது இடங்கள்
ஆண்கள் துணை இல்லாமல் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடைசெய்யும் ஆடை மற்றும் சட்டங்கள் மீதான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில், பள்ளிகள் புதிய கல்வியாண்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டன.
பெண்கள் கல்வி
ஆனால் தலிபான்கள் முன்பு கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளது, பெண்கள் தற்போது மேல்நிலைப் பள்ளியில் சேர அனுமதிக்கப்படவில்லை. தலிபான்கள் பெண் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கும் காரணத்தால் பெண்களுக்கான மேல்நிலை கல்வி அனுமதிக்கப்படுவது இல்லை எனத் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
இதேபோல் வேலைவாய்ப்பில் பெண்களின் ஈடுபாடு 1998 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 15 முதல் 22 சதவீதம் வரையில் உயர்ந்தது. ஆனால் 2021ல் இது மீண்டும் 15 சதவீதமாகச் சரிந்தது, 10 வருட முயற்சிகளை ஒரு வருடத்தில் சீரழிந்துள்ளது.
பொருளாதாரம்
ஆப்கானிஸ்தான் அஷ்ரஃப் கனியின் ஆட்சியின் போதே சரிந்து கொண்டிருந்த பொருளாதாரம், தலிபான்கள் கைப்பற்றிய பிறகு மிகப்பெரிய அளவில் மோசமாகிவிட்டது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது முதல், பல வெளிநாட்டு வளர்ச்சி அமைப்புகள், நிதி அமைப்புகள் அந்நாட்டை விட்டு வெளியேறியது. அதே நேரத்தில், சர்வதேச தடைகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தைக் கூடுதலாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
நிதி உதவி
வெளிநாட்டு நிதி உதவி நிறுத்தப்பட்டதன் மூலம் நிதி கையிருப்பு பெரிய அளவில் சரிந்துள்ளது, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு நிதி உதவி சுமார் 45% பங்களிப்பதால் இந்தத் திடீர் நிறுத்தம் அந்நாட்டின் நிதிநிலையை மோசமான நிலைக்குக் கொண்டு சென்றது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
பொதுச் செலவுகள்
வெளிநாட்டு நிதி உதவிகள் குறைந்துள்ளதால் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொதுச் செலவுகள் கிட்டத்தட்ட 60% குறைந்து. இதனால் மக்களுக்கான அடிப்படை சலுகை, வசதிகள் கிடைப்பதிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சில சர்வதேச நாடுகள் உதவி செய்தாலும் அந்நாட்டின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த உதவவில்லை.
வறுமைக் கோடு
ஐநா வெளியிட்ட அறிக்கையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்கள் தொகையில் பாதிப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மில்லியன் கணக்கான ஆப்கானிஸ்தான் குடிமக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
நிலக்கரி ஏற்றுமதி
பொருளாதாரச் சூழ்நிலைகளை மேம்படுத்தும் அணுகுமுறையில், தலிபான் அரசாங்கம் வரி வருவாயை அதிகரித்து நிலக்கரி ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரியில், தலிபான் அரசாங்கம் மூன்று மாத பட்ஜெட்டை அறிவித்தது, அதில் தலிபான்கள் உள்நாட்டு வருவாயாக 2021 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை $400 மில்லியன் வசூலித்ததாகத் தெரிவித்துள்ளது.
ஜிடிபி
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் 2020 ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $20 பில்லியனாக இருந்தது மற்றும் 2021 இல் தலிபான்களின் ஆட்சியின் கீழ் $16 பில்லியனாகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜிடிபியை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், 2022ல் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜிடிபி 14 பில்லியன் டாலராகக் குறையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருடாந்திர தனிநபர் வருமானம்
2012ல் 650 டாலராக இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் வருடாந்திர தனிநபர் வருமானம் 2020ல் 500 டாலராகக் குறைந்துள்ளது. இது வரும் ஆண்டுகளில் 350 டாலராகச் சரியலாம் என UNDP அறிக்கை கூறுகிறது. இந்தக் கூர்மையான சரிவு ஆப்கானிஸ்தானை ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
How Afghanistan changed One Year Of Taliban Rule; Women education, GDP, poverty bad shape
How Afghanistan changed One Year Of Taliban Rule; Women education, GDP, poverty bad shape ஆப்கானிஸ்தான்-ஐ தாலிபான்கள் கைப்பற்றி முழுசா 1 வருசம் ஆச்சி.. எப்படி இருக்கு..?