நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் நெல்சன் திலீப்குமாரை கடுமையாக ட்ரோல் செய்தனர். படம் சொதப்பினாலும் படத்தின் பாடல்கள் அனிருத் இசையில் நன்றாகவே ஒர்க் ஆகியிருந்தன. அதுமட்டுமின்றி விஜய்யிடம் எப்போதும் தனித்துவமாக இருக்கும் நடனத்தையும் பலர் பீஸ்ட் படத்தில் பாராட்டினர். அப்படி விஜய்யை ஆட்டுவித்தவர் ஜானி மாஸ்டர்.
தெலுங்கில் பிரபல நடன இயக்குநராக இருக்கும் ஜானி தமிழிலும் தற்போது அதிக படங்களுக்கு நடனம் அமைக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி அவர் பீஸ்ட், திருச்சிற்றம்பலம், கொம்பன் உள்ளிட்ட படங்களுக்கும் அவர் நடனம் அமைத்திருக்கிறார். ஜானியின் நடன அமைப்பு பாராட்டப்பட்டாலும் விமர்சனத்தையும் சந்தித்துவருகிறது.
ஜானி தமிழுக்கு ஏற்றவாறு நடனம அமைப்பதில்லை. அவரது நடன அமைப்புகள் அனைத்தும் அந்நியமாகவே இருக்கின்றன எனவும் சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் வந்தன.
Thank you for gracing the Pooja Ceremony of my new film #YathaRajaTathaPraja @ImSharwanand garu, #AayushSharma ji & #JKarunaKumar garu @imVdeshK @verma_shrasti #SrinivasVittala #HareshPatel #OmMovieCreations #SriKrishnaMovieCreations @PulagamOfficial pic.twitter.com/ggVBogGXSL
— Jani Master (@AlwaysJani) August 22, 2022
இந்நிலையில் ஜானி மாஸ்டர் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அந்தப் படத்திற்கு Yatha Raja Tatha Praja என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது.
Media coverage on @AlwaysJani starrer #YathaRajaTathaPraja launch @imVdeshK @verma_shrasti #SrinivasVittala #HareshPatel @radhanmusic @sunojvelayudhan #OmMovieCreations #SriKrishnaMovieCreations @PulagamOfficial pic.twitter.com/PgaeKI1CTZ
— Pulagam Chinnarayana (@PulagamOfficial) August 23, 2022
அந்த விழாவில் ஜானி மாஸ்டர், படத்தின் இயக்குநர், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.