வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த 1951 ம்ஆண்டு முதல் தென் மாநிலங்களில் மக்கள் தொகை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில், இந்திய மக்கள் தொகையில் தென் மாநிலங்களின் பங்கு 19.8 சதவீதம் மட்டுமே உள்ளதாக தெரிகிறது.
2022 ம் ஆண்டு மக்கள் தொகை குறித்த கணக்கீட்டின்படி, இந்திய மக்கள் தொகையில், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளின் பங்கு 19.8 சதவீதம் மட்டுமே உள்ளது. அதேநேரத்தில், உ.பி., ராஜஸ்தான், ம.பி., பீஹார், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டின் பங்கு 43.2 சதவீதமாக உள்ளது.
இந்திய மக்கள் தொகையில்
வட மாநிலங்களின் பங்கு
1951ல் 39.1 சதவீதமாகவும்
1961 ல் 38.5 சதவீதமாகவும்
1971 ல் 37.9 சதவீதமாகவும்
1981 ல் 38.3 சதவீதமாகவும்
1991 ல் 38.8 சதவீதமாகவும்
2001 ல் 40.2 சதவீதமாகவும்
2011 ல் 41.4 சதவீதமாகவும்
2022 ல் 32.2 சதவீதமாகவும்
தென் மாநிலங்களின் பங்கு
1951ல் 26.2 சதவீதமாகவும்
1961 ல் 25.2 சதவீதமாகவும்
1971 ல் 24.8 சதவீதமாகவும்
1981 ல் 24.2 சதவீதமாகவும்
1991 ல் 23.3 சதவீதமாகவும்
2001 ல் 21.8 சதவீதமாகவும்
2011 ல் 20.9 சதவீதமாகவும்
2022 ல் 19.8 சதவீதமாகவும் உள்ளது தெரியவந்துள்ளது.
(2022ம் ஆண்டு மக்கள் தொகை தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது)
இது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவதற்கு காரணம், அங்கு வாழும் மக்களின் கல்வியறிவே. முக்கியமாக அங்கு பெரும்பாலான பெண்கள் படித்தவர்களாக உள்ளனர். இதனால், அவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்வது கிடையது.
அங்கு குழந்தை பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. ஆனால், வட மாநிலங்களில் இதற்கு மாறாக உள்ளது. அங்கு மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், அவர்கள் வேலைவாய்ப்பை தேடி தென் மாநிலங்களுக்கு செல்வார்கள். வட மாநிலங்களில் இருந்து, அதிகம் படிக்காதவர்கள் தென் மாநிலங்களில் குடியேறுவார்கள்.
குறைவான சம்பளத்தில் அதிகம் பேர் பணியாளர்களாக வருவது இங்கு சமூக அமைதியை பாதிக்கும் அபாயம் உள்ளது. அவர்கள் அதிகம் பேர் வருவதால், இங்குள்ள படிக்காத தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், அவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement