நாடு முழுவதும் நடைபயணம் செய்து காந்திய கொள்கையை பரப்பி வரும் கருப்பையா

திருப்பதி: தேசப்பிதா மகாத்மா காந்தியின் அகிம்சை, கொள்கை, நாட்டின் ஒற்றுமையை உட்பட பல கருத்துக்களை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மற்றும் நடைபயணம் மேற்கொண்டு வரும் காந்தியவாதியான எம் கருப்பையாவைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். அகில இந்திய காந்திய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செயலாளராகப் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த கருப்பையா 1992 ஆம் ஆண்டு சைக்கிள் மற்றும் நடைபயணம் பயணத்தைத் தொடங்கி இதுவரை 97,000 கி.மீ. தூரம் கடந்துள்ளார்.

2000 ஆம் ஆண்டில், கருப்பையாவின் எட்டு வருட சைக்கிள் பிரச்சார பயணத்திற்கு ஒரு துணை கிடைத்தது. அது அவரது மனைவி சித்ரா தான். அவரை ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார். அதே ஆண்டு சித்ராவை திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து தனது கணவரின் கனவின் ஒரு அங்கமாகிவிட்டார் சித்ரா. கருப்பையா மற்றும் சித்ரா ஆகியோர் முறையே 1961 மற்றும் 1958 இல் பிறந்தவர்கள். இருவரும் பல்வேறு காரணங்களுக்காக சைக்கிள் பயணத்தை மேற்கொண்டனர். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜூன் 28 அன்று திருச்சியில் இருந்து அவர்கள் சமீபத்திய சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார்கள். இந்த சைக்கிள் பயணத்தின் போது கருப்பையாவின் மனைவி சித்ரா வழியில் உயிர் இழந்தார். இது கருப்பையாவை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் தனது மனையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக பயணத்தை தொடர்ந்து செய்வேன் என அவர் கூறியுள்ளர்.

 

எனது எண்ணம், கனவு குறித்து தெரிந்துக்கொண்டு அவளாக (மனைவி சித்தரா) பின்தொடர்ந்து, எனது பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த சித்ரா, ஆகஸ்ட் 8 ஆம் தேதி திருப்பதியில் உள்ள சூலூர்பேட்டை அருகே உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். உள்ளூர் மக்களின் உதவியுடன் கிருஷ்ணா நதிக்கரையில் சித்ராவின் இறுதிச் சடங்குகளை முடித்து, எனது பயணத்தைத் தொடர்ந்தேன். இந்த பயணம் செப்டம்பர் 5 ஆம் தேதி பெங்களூரில் முடிவடைகிறது என்று கருப்பையா கூறியுள்ளார்.

Karuppiah

மனைவியின் இறுதிச் சடங்குகளை அவர்களின் சொந்த இடத்துக்குப் பதிலாக ஆந்திராவில் ஏன் முடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, பதிலளித்த அவர், “எது நடந்தாலும், எக்காரணம் கொண்டு நடுவழியில் பயணத்தை நிறுத்தாமல் தொடர வேண்டும் என்பதே என் மனைவியின் விருப்பம். எனவே 1 லட்சம் கிமீ பயணத்தை முடித்து, அதை என் மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன் எனக் கூறினார். 

Karuppiah Wife Chitra

2010 ஆம் ஆண்டு கருப்பையாவும் சித்ராவும் தங்கள் சைக்கிள் பயணத்தின் ஒரு பகுதியாக வாகாவுக்கு (இந்தியா-பாகிஸ்தான் எல்லை) சென்றபோது, ​​சித்ராவை அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, சித்ரா மீண்டும் கருப்பையாவின் சைக்கிள் பயணத்தில் இணைந்தார். காந்திய கொள்கையை மக்களுக்கு சென்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருவரும் பல்வேறு விழிப்புணர்வு நடைபயணங்களை மேற்கொண்டுள்ளனர். தற்போது மனைவி இல்லாமல், தனி ஆளாக காந்தியவாதியான எம் கருப்பையா பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.