தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கியது. இந்தத் தேர்வு 3,119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதினர். அதனைத் தொடர்ந்து ப்ளஸ் 1 தேர்வு முடிவுகளானது ஜூன் 27ஆம் தேதி வெளியானது. அதில், தேர்வு எழுதியவர்களில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக மாணவிகள் 94.99 சதவீதம் பேரும், மாணவர்கள் 84.86 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்தனர்.
இந்தச் சூழலில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வானது ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியாக இருக்கிறது. மாணவ, மாணவிகள் நாளை பிற்பகல் 3 மணியிலிருந்து தங்களது ரிசல்ட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.