இந்திய கடற்படை ஏவுகணை சோதனை வெற்றி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புபனேஷ்வர்: ஒடிசா கடற்கரையில் இந்திய கடற்படை, தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வி.எல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

latest tamil news

இந்திய கடற்படை வி.எல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சோதனை செய்தது. இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

latest tamil news

ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. சோதனையில் இலக்கை துல்லியமாக தாக்கி ஏவுகனை அழித்தது. சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.