கூண்டுக்குள் மனிதர்கள்.. சுதந்திரமாக திரியும் விலங்குகள்.. வித்தியாசமான மிருககாட்சி சாலையை பாருங்க

பீஜிங்: சீனாவில் உள்ள ஜூ ஒன்றில், வித்தியாசமாக நடு காட்டுக்குள் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய கூண்டுக்குள் இருந்து சுற்றுலா பயணிகள் விலங்குகளை பார்க்கும் திகில் நிறைந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

வனவிலங்குகளையும் அவற்றின் பழக்க வழக்கங்களையும் காண வேண்டும் என்ற ஆர்வம் நாம் அனைவருக்குமே இருக்கத்தான் செய்யும்.

விலங்குகளின் தோற்றம், அதன் பாவனைகள், பயமுறுத்தும் காட்சி போன்றவற்றை நேரடியாக பார்க்க பலருக்கும் விருப்பம் இருக்கும்.

வண்டலூர் உயிரியல் பூங்கா

ஆனால் இதற்காக நேரடியாக வனத்திற்கு சென்றுவிட முடியாது. மீறி சென்றாலும் உயிருடன் திரும்புவது என்பது நிச்சயம் இல்லாததே. நமது ஊர் சட்டங்களும் அதற்கு அனுமதிக்காது. இதனால், டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்களில் நாம் வனவிலங்குகளை கண்டு ரசித்தாலும் அதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும். இதற்காகத்தான் பல இடங்களில் ஜூ (உயிரியல் பூங்காக்கள்)க்கள் உள்ளன. சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கூட மக்கள் அதிகளவில் செல்வது வழக்கம்.

 விலங்குகளுக்கு சுதந்திரம்.. மனிதர்களுக்கு கூண்டு..

விலங்குகளுக்கு சுதந்திரம்.. மனிதர்களுக்கு கூண்டு..

இத்தகைய உயிரியல் பூங்காக்கங்களில் குறிப்பிட்ட பரப்பளவில் சிங்கம், புலி போன்ற விலங்குகள் அதற்கான இடத்தில் விடப்பட்டு இருக்கும். சற்று தொலைவில் இருந்து நாம் பார்க்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும். இதற்கு இடையில் பல அடுக்கு கம்பி வேலிகள் போடப்பட்டு பதுகாப்பும் இருக்கும். கூண்டுகளில் விலங்குகள் அடைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுவது சில நாடுகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி வன விலங்குகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைத்து வைத்து அதை பார்ப்பதை விட விலங்குகளை சுதந்திரமாக உலவ விட்டு மனிதர்களை ஒரு கூண்டுக்குள் வைத்து அடைத்து விட்டால் எப்படி இருக்கும்… கேட்பதற்கே திகிலூட்டும் வகையில் இருக்கும் இந்த வசதி சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் உள்ளது.

 திகிலூட்டும் வகையில்...

திகிலூட்டும் வகையில்…

சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள லேஹே லெடு வனவிலங்கு உயிரியல் பூங்காவில் சிங்கம் , புலி உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளும் சுதந்திரமாக உலவிக்கொண்டு இருக்கின்றன. அங்கு நான்குபுறமும் அடைக்கப்பட்ட ஒரு கூண்டில் சுற்றுலாப்பயணிகள் கொண்டு விடப்படுகின்றனர். இந்தக் கூண்டுகளை நோக்கி விலங்குகளை வரவப்பதற்காக, சுற்றுலாப்பயணிகள் அடைக்கப்பட்டு இருக்கும் கூண்டுகளை கொண்டு வரும் டிரக்கில் இறைச்சி துண்டுகள் கட்டி தொங்க விடப்படுகின்றன. இதைப்பார்க்கும் விலங்குகள் இறைச்சி துண்டுகளை கவ்வுவதற்காக ஓடி வந்து இந்தக் கூண்டுகளை சுற்றி மொய்க்கின்றன. சில விலங்குகளோ ஒய்யாரமாக மேலே படுத்து கிடக்கின்றன. சுற்றுலாப்பயணிகளுக்கு திகிலூட்டும் வகையில் இந்த அனுபவம் அமைகிறது.

 இது மனித ஜூ...

இது மனித ஜூ…

இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து டிரண்ட் ஹிட் அடித்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை வாரி இறைத்து வருகின்றனர். இந்த பதிவை வெளியிட்ட தன்சு யெகன் என்பவர் கேப்ஷன் ஒன்றையும் அதோடு போட்டுள்ளார். அந்த கேப்சனும் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. அவர் வெளியிட்ட கேப்ஷனில், “இது மனித ஜூ… இங்கு ஆபத்தான மனிதர்களை கூண்டுகளில் விலங்குகள் காண முடியும்” என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவை ஆமோதித்து பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் சிலர் கூறுகையில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட உயிரியல் பூங்காக்களில் மட்டுமே இது சாத்தியம் என்று தெரிவித்துள்ளனர். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், இதில் விஷேசமாக எதுவும் இல்லை. பெரிய பரந்த திறந்த வெளி கூண்டுகளில் விலங்குகள் அடைக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.