பஞ்சாயத்து தலைவர் கொலை; கைதான பா.ஜ. நிர்வாகி, மாணவன் பரபரப்பு வாக்குமூலம்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் (65). இவர் நேற்று மதியம் 12 மணி அளவில் அதே ஊர் விஜயாபுரி சாலையில் உள்ள தோட்டத்தில் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தெற்கு திட்டங்குளம் கீழத் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (33), காளிதாஸ் மகன் வசந்த் (18) ஆகியோர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. கார்த்திக் கோவில்பட்டி வடக்கு ஒன்றிய பா.ஜ. இளைஞரணி தலைவராக உள்ளார். வசந்த், கோவில்பட்டியில் ஐடிஐயில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் 2 பேரும் நேற்று கோவில்பட்டி கிழக்கு போலீசில் சரண் அடைந்தனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி தெற்கு திட்டங்குளம் பஞ்சாயத்தில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தெற்கு திட்டங்குளத்தில் கழிப்பறை கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ளது. இதை திறக்க வேண்டும் என்றும், திட்டங்குளம் கண்மாயில் முட்புதர்கள் அதிகமாக உள்ளதால், அவைகளை அகற்ற வேண்டும் என்றும், திட்டங்குளம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தோம். எங்களது கோரிக்கைகள் ‘மினிட்’ புத்தகத்தில் ஏற்றப்பட்ட நிலையில், எனது (கார்த்திக்) லெட்டர் பேடில் அந்த கோரிக்கைகளை மனுவாக எழுதி, பஞ்சாயத்து தலைவரிடம் கையெழுத்து வாங்குவதற்காக அவரது அலுவலகத்திற்கு சென்ேறாம்.

அவர் அங்கு இல்லை. தோட்டத்திற்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். அதன்பின்னர் ேதாட்டத்திற்கு சென்றோம். அங்கு அவரிடம் மனுவில் கையெழுத்து கேட்ேடாம். அவர் போட மறுத்ததோடு, எங்களை அவதூறாக பேசினார். அவருக்கும், எங்களுக்கும் தகராறு ஏற்படவே, தோட்டத்தில் வைத்திருந்த அரிவாளால் எங்களை வெட்ட ஆக்ரோஷத்தோடு வந்தார். இதை எதிர்பார்க்காத நாங்கள், சுதாரித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டோம். இதில் அரிவாள் அவரது பிடியிலிருந்து நழுவி கீழே விழுந்தது. அதைக் கைப்பற்றி அவரை வெட்டிக் கொன்றோம். பின்னர் கோவில்பட்டி கிழக்கு போலீசில் சரண் அடைந்தோம். இவ்வாறு கார்த்திக்கும், வசந்தும் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே பொன்ராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை இன்று 2வது நாளாக வாங்க மறுத்து பொன்ராஜின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொன்ராஜின் மனைவி பொன்னுத்தாய் கூறுகையில், ‘‘எனது கணவரின் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். சரண்டரான இவர்கள் 2 பேரின் பின்னால் பெரிய நபர்கள் உள்ளனர். அவர்களை கைது செய்யும் வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம்.’’ என்றார். பொன்ராஜின் உறவினர்களிடம் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தக் கொலையால் தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.