தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் ‘தூய்மை இந்தியா’ நிதியில் ஒரு கழிவறை கூட கட்டப்படவில்லை

சென்னை: தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் ‘தூய்மை இந்தியா’ நிதியில் ஒரு கழிவறை கூட கட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்கவும், சாலைகளையும் பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் கடந்த 2014-ம் ஆண்டு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தத் திட்டத்தில் பொது இடங்களில் கழிவறைகள் மற்றும் வீடுகளில் தனிநபர் கழிவறைகள் மானியம் வழங்கப்படுகிறது.

முதல் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் வீடுகளில் ஒரு தனி நபர் கழிவறை கட்ட ரூ.30,000, சமூக கழிவறை கட்ட ரூ.98,000, பொதுக் கழிவறைகள் கட்ட ரூ.98,000, சிறுநீர் கழிக்கும் கழிவறைகளை கட்ட ரூ.12,800 நிதி உதவி அளிக்கப்பட்டு வந்தது.

இந்த உதவித் தொகை இரண்டாவது ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் உயர்த்தி வழங்கப்பட்டது. இதன்படி, இரண்டாவது தூய்மை இந்தியா திட்டத்தில் ஒரு தனி நபர் கழிவறை கட்ட ரூ.30,000, சமூக கழிவறை கட்ட ரூ.1,50,000 , பொதுக் கழிவறைகள் கட்ட ரூ.1,50,000 , சிறுநீர் கழிக்கும் கழிவறைகளை கட்ட ரூ.32,000 நிதி உதவி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மார்ச் 2021-ம் ஆண்டு வரை 5,08,562 தனி நபர் இல்ல கழிவறைகளை கட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2021 வரை ஒரு கழிவறை கட்டப்படவில்லை. இதைப்போன்று மார்ச் 2021-ம் ஆண்டு வரை 92,744 சமூக மற்றும் பொது கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை ஒரு கழிவறை கட்டப்படவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.