ரஷ்யர்கள் சிறையில் அட்டூழியங்கள் செய்ததாக விடுவிக்கப்பட்ட உக்ரேனிய வீரர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
ரஷ்யா மீது ஏற்கனவே போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
போரில் காயமடைந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று உக்ரேனிய துருப்புக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டபோது கடுமையான சித்திரவதை மற்றும் உளவியல் அழுத்தத்தை கொடுத்ததாக ரஷ்யர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர்கள், தெற்கு துறைமுகமான மரியுபோலில் எஃகுத் தொழிற்சாலையிலிருந்து வாரக்கணக்கில் போராடிய ஒரு குழுவின் ஒரு பகுதியாக இருந்த வீரர்கள் ஆவர்.
அவர்கள் சமீபத்தில் உக்ரைனிய தலைநகர் கீவில் ஒரு செய்தி மாநாட்டின் போது, பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு தங்களைக் ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்த முயன்றதாகக் ரஷ்யர்கள் மீது குற்றம்சாட்டினர்.
AFP
ரஷ்யா மீது ஏற்கனவே உக்ரைன் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, ஆனால் மாஸ்கோ அந்த கூற்றுக்களை மறுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்யர்கள் தங்களை சித்திரவதை செய்ததாக விடுவிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு காலை இழந்த உக்ரைனிய வீரரான Vladyslav Zhaivoronok, “என் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் எனக்கு ஆன்டிபையோட்டிக் மருந்துகள் கொடுக்க தொடங்குவதற்கு முன்பே நான் விசாரிக்கப்பட்டேன்.
அங்கிருந்த தோழர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். சிலரின் காயங்களில் ஊசிகள் செருகப்பட்டன, சிலர் தண்ணீரால் சித்திரவதை செய்யப்பட்டனர், சிலருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை” என்று அவர்கூறினார்.
உக்ரைனிய வீர்கள் விடுவிக்கப்பட்ட சரியான தேதி தெரியவில்லை, ஆனால் ஜூன் மாதம் ரஷ்யா 144 கைதிகளை விடுவித்ததாக உக்ரைன் அறிவித்தது.
AFP
Zhaivoronok உக்ரைனின் தேசிய காவலரின் அசோவ் படைப்பிரிவில் பணியாற்றினார். அசோவ் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர தேசியவாத வேர்களைக் கொண்ட சில நபர்களை உள்ளடக்கியா படையாகும்.
நூற்றுக்கணக்கான அசோவ் படைகள் மரியுபோல் எஃகு சுரங்கங்கள் மற்றும் பதுங்கு குழிகளில் இருந்து வாரக்கணக்கில் ரஷ்யர்களுக்கு எதிராக போரிட்டு, பின்னர் மே மாதத்தில் சரணடைந்தனர்.
ஆகஸ்ட் 2 அன்று ரஷ்ய உச்ச நீதிமன்றம் அசோவ் படைப்பிரிவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
AFP