இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: பிரபல இயக்குனரும்,  நடிகருமான பாரதிராஜா (வயது 79) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாரதிராஜா. கிராமத்து ராஜா என்று எல்லோரும் அழைக்கும் அளவிற்கு இவர் தொடர்ந்து தமிழ் மண்ணின் வாசனைகளை தமிழ்சினிமாவில் பரப்பி வந்தவர். தற்போது 79 வயதாகும் பாரதிராஜா சமீபகாலமாக படங்கள் இயக்குவதை தவிர்த்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தனது படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.  சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தவாக பாரதிராஜா நடித்திருந்தார். அதுபோல கடந்த வாரம், ல் மதுரையில் நடைபெற்ற விருமன் பட இசை வெளியீட்டு விழாவிலும் பாரதிராஜா கலந்துகொண்டு உற்சாகமாக பேசினார்.

இந்த நிலையில் பாரதிராஜாவுக்கு இன்று  திடீர் உடலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை  சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைப்படும் வகையில் ஏதுமில்லை. ஒருசில நாட்களில் அவர்   வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம், ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதுபோல கடந்த இரு நாட்களுக்கு முன்பு  பாரதிராஜாசென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது,  மதுரை விமான நிலையத்தில் மயங்கி விழுந்ததாகவும், அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல பிரபலங்கள், அவரின் உடல்நலம் குறித்து, குடும்பத்தினரை தொடர்பு கொண்டு  விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.