மகாராஷ்டிராவில் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை ரயில் வரும்போது தள்ளிவிட்டு கொலை செய்த கணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர், அங்குள்ள ரயில் நிலையத்தில் 2 குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்த மனைவியை எழுப்பி, அவரை தரதரவென இழுத்து சென்று, அவாத் விரைவு ரயில் வரும் தண்டவாளத்தில் வீசினார்.
இதில் மனைவி உடல் சிதைந்து உயிரிழந்த நிலையில், குழந்தைகளை தூக்கி கொண்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.