ஒண்டிவீரனை சுமக்கும் பாஜக; பதிலடிக்கு தயாரான சமூகம்!

இந்தியா 75வது சுதந்திர தினத்தை அமுதப் பெருவிழாவாக கொண்டாடி மகிழும் இந்த நேரத்தில் தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட ஒண்டிவீரன் என்கிற அருந்ததியர் சமுதாய போராளியின் வீரமரணத்தின் 250வது ஆண்டை நினைவு தினத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

ஒண்டிவீரனை பாஜக திடீரென தூக்கி பிடித்திருப்பதன் காரணம் அருந்ததியர்கள் மீது இருக்கும் பாசமா? என்றால் அது தான் இல்லை என்று அரசியல் நோக்கர்கள் தெளிவாக கூறுகின்றனர்.

கடந்த தேர்தலுக்கு முன்பு வரை தேவேந்திர குல வேளாளர்களை கண்டுகொள்ளாமல் இருந்த பாஜ திடீரென அவர்கள் மீது தனி பாசம் காட்டியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்கள்ளின் அனைத்து உட்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசு அரசாணையை வெளியிட்டது.

இதை பெரிதும் நம்பிய தேவேந்திர குல வேளாளர்கள் கடந்த தேர்தலில் பாஜகவை ஆதரித்து, தேர்தல் பணிகளை செய்தனர். இதன் பலனாக, தென்மாவட்டங்களில் பட்டியலினத்தின் பெரும்பாலான வாக்குகளை பாஜக அறுவடை செய்தது.

தேர்தலுக்கு முன்பாக, தேவேந்திர குல வேளாளர்கள் பெயர் மாற்றம் விவகாரத்தில், இறங்கி அடித்த பாஜக தேர்தலுக்கு பின்னர், பட்டியல் மாற்றம் குறித்து எவ்வித அக்கறையையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது திடீரென ஒண்டிவீரன் புகழை பாடுவதை பார்த்தால் பாஜகவின் அடுத்த இலக்காக அருந்ததியர் சமுதாயம் இருப்பதை நன்றாகவே அறிய முடிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை பட்டியல் இனத்தில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு அடுத்ததாக அருந்ததியர் சமுதாயம் தான் பெரும்பாண்மையாக உள்ளது. இதன் காரணமாகவே பாஜகவின் குறி அருந்ததியர் சமுதாயத்தின் மீது திரும்பி உள்ளது.

தமிழகம் முழுவதும், அருந்ததியர் சமுதாய மக்கள் பரவி கிடக்கின்றனர். ஆனாலும் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் என 4 மாவட்டங்களில் மட்டுமே சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வசிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்ததுபோலவே அருந்ததியர் சமுதாயத்தில் இருக்கும் மாதாரி, சக்கிலி, மாதிகா, பகடை, தோட்டி, செம்மான் உள்ளிட்ட பிரிவுகளையும் இணைத்து அருந்ததியர் என்று அரசாணை வெளியிடுவது தான் மத்திய பாஜக அரசு போடும் ப்ளான் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனால் அதே சமயம் கடந்த 2006-2011ம் ஆண்டு

ஆட்சி காலத்திலேயே ஒண்டிவீரனுக்கு மணி மண்டபம் அமைத்து கொடுத்து அருந்ததியர் சமுதாய மக்களின் நீங்காத இடத்தை கலைஞர் பெற்றுவிட்டதாக உடன் பிறப்புகள் அடித்து சொல்கின்றனர்.

இதற்கு வலுசேர்க்கும் வகையில், பாஜகவின் இந்த திடீர் பாசம் நம்பிக்கை தருவதாக இல்லை. உள் நோக்கத்துடன் தபால் தலை வெளியிட்டுள்ளனர். இதற்காக பாஜக எங்களை திராவிட கட்சிகளிடம் இருந்து பிரிக்க நினைத்தால் ஏமாற்றமே பரிசாக கிடைக்கும் என்று, அருந்ததியர் சமுதாய விபரம் அறிந்தவர்கள் பதிலடி தருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.