புவனேஸ்வர்: டிரோன்களை அழிக்கும் விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது என டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரையில் இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்டது என தெரிவித்து உள்ளது.
வேகமாக நகரக்கூடிய ஆளில்லா விமானங்கள் போன்ற குறுகிய தொலைவு இலக்குகளை செங்குத்தாக ஏவப்பட்டு துல்லியமாக தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை டிஆர்டிஓ தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையானது இன்று ஒடிசாவின் சண்டிப்பூர் கடல்பகுதியிலிருந்து இந்திய கடற்படை கப்பல் மூலம் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையில், ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி ஏவுகணை அழித்தது. ஏவுகணையின் செங்குத்து ஏவுதல் திறனை நிரூபிப்பதற்காக அதிவேக ஆளில்லா வான்வழி இலக்குக்கு எதிராக இந்த ஏவுகணை இந்திய கடற்படைக் கப்பலில் இருந்து நடத்தப்பட்டது. இந்த ஏவுகணையான முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும், உள்நாட்டு ரேடியோ அதிர்வெண் தேடு கருவி பொருத்தப்பட்ட ஏவுகணை என்றும் ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. செங்குத்து ஏவுதல் குறுகிய தூர மேற்பரப்பு-விமான ஏவுகணை (VL-SRSAM) அமைப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது அதன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.