அரச பல்கலைக்கழங்கள் அனைத்தும் செப்டெம்பர் மாதம் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து இதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், கடந்த இரண்டு வருடங்களில் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இணைய வழி மூலம் ( ஒன்லைன்) முறையில் இடம்பெற்றது.
எரிபொருள் போதிய அளவில் கிடைக்கப் பெறாததால், பல்கலைக்கழகங்களின் சில பீடங்களில் கல்வி நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாக அவர் கூறினார். தொடர்ந்தும் கல்வி நடவடிக்கைகள் ஒன்லைன் முறையில் இடம்பெறும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.