இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து துறையிலும் ஆன்லைன் ஷாப்பிங் வந்துள்ளது.
இதில் முக்கியமான வீட்டுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள், லைட்டிங், கட்டில், பெட் ஆகியவற்றை ஆன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனங்களின் வர்த்தகம் வேகமாக அதிகரித்து வருகிறது.
இத்துறையில் முன்னோடியாக இருக்கும் Wakefit நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே பல தொழிற்சாலைகளை வைத்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், அதன் மொத்த உற்பத்தி அளவை அதிகரிக்கவும் புதிய தொழிற்சாலையை ஓசூரில் அமைத்துள்ளது.
Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
Wakefit நிறுவனம்
Wakefit நிறுவனம் இன்று வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டின் ஓசூரில் தனது மிகப்பெரிய பர்னிச்சர் உற்பத்தி தொழிற்சாலையைத் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் உயர்வது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் அதன் சப்ளை செயினை மேம்படுத்த முடியும்.
ஓசூர்
ஓசூரில் திறக்கப்பட உள்ள புதிய பர்னிச்சர் உற்பத்தி தொழிற்சாலை சுமார் 14 ஏக்கர் அதாவது 600000 சதுரடி பரப்பளவில் அமைய உள்ளது. இதில் 350000 சதுரடி பர்னிச்சர் தயாரிப்புக்காகவும், 250000 சதுர பினிஷிங் மற்றும் கிடங்குகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக Wakefit நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓசூர் தொழிற்சாலை
இப்புதிய ஓசூர் தொழிற்சாலை முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தினமும் 5000 பெட், 2000 சோபா, 3000 டைனிங் டேபிள், மாதத்திற்குச் சுமார் 1 லட்சம் வீடுகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் தயாரிக்க முடியும் என Wakefit நிறுவனம் தெரிவித்துள்ளது.
செலவினங்கள்
இந்தத் தொழிற்சாலை மூலம் செலவினங்களைக் கட்டுப்படுத்திக் குறைந்த விலையில் தரமான பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கும் இதன் பலன்களை விலை அளவில் கொடுக்க முடியும் என Wakefit நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கியத் தளம்
மேலும் ஓசூர் தொழிற்சாலை உற்பத்திக்காக மட்டும் அல்லாமல் இந்த வடிவமைப்பு, உற்பத்தி, பேக்கேஜிங், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கடைசி மைல் டெலிவரி என நிறுவனத்தின் அனைத்து அடிப்படையிலும் இயக்க முடிவு செய்துள்ளது.
மெத்தை, தலையணை
Wakefit.co மெத்தைகள், தலையணைகள், பெட் பிரேம்கள் விற்பனையுடன் தொடங்கியது, ஆனால் சில வருடத்தில் மக்கள் மத்தியில் அதிகளவிலான நம்பிக்கை கிடைத்த காரணத்தால் அதன் விற்பனை மற்றும் பொருட்கள் போட்ர்போலியோவை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது.
போட்ர்போலியோ
Wakefit நிறுவனம் தற்போது ஆபீஸ் டேபிள், புத்தக அலமாரிகள், ஷூ ரேக்குகள், டிவி யூனிட்கள், பெட்சைட் டேபிள்கள், காபி டேபிள்கள், டைனிங் டேபிள்கள், டவல்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கும் வகையில் அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவிற்கு விரிவடைந்துள்ளது.
சொந்த இணையத் தளம்
இந்நிறுவனம் அனைத்து பொருட்களையும் தனது சொந்த இணையத் தளத்தில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இதர ஈகாமர்ஸ் தளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. Wakefit நிறுவனம் பெங்களூரு, ஜோத்பூர் மற்றும் டெல்லி-யில் சொந்தமாகத் தொழிற்சாலைகளை வைத்துள்ளது.
Wakefit opens new factory in TamilNadu; 14 acre largest manufacturing unit in Hosur
Wakefit opens new factory in TamilNadu; 14 acre largest manufacturing unit in Hosur ஓசூரில் புதிய தொழிற்சாலை.. அசத்தும் Wakefit..!