பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி; தயாராகும் சூப்பர் கிஃப்ட்!

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போதே மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் அறிவிப்பினை திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே போட்டிப் போட்டபடி அறிவித்தன.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தது.

அதன்படி தமிழக அரசின் சார்பில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, லேப்டாப் உற்பத்திக்கு மிக முக்கிய தேவையாக விளங்கும் சிபியு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் உலகளவில் தட்டுபாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து இலவச லேப்டாப் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.

இதன் எதிரொலியாக கடந்த 2019ம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே இந்த கல்வி ஆண்டிலாவது ஏற்கனவே வழங்காமல் நிலுவையில் இருக்கும் மாணவர்களுக்கும் சேர்த்து லேப்டாப்புகள் வழங்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு பதிலாக டேப்லெல் வழங்க தமிழக அரசு திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவச டேப்லெட் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகலாம் எனும் பட்சத்தில் அதே டேப்லெட் என்றால் ரூ.7 ஆயிரத்திலேயே முடித்துக்கொள்ள முடியும்.

அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற ஊராட்சி தலைவர்!

இதன் மூலம் ஒரு மாணவரின் மூலம் பாதிக்கு பாதி அதாவது ரூ.7 ஆயிரம் மிச்சம் ஆகிறது. இதன் காரணமாகவே, டேப்லெட் வழங்கும் திட்டத்தை கையில் எடுக்கும் முடிவுக்கு தமிழக அரசு வந்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் தரப்பில் கூறுகையில், ‘தற்போதை சூழலில் எல்லாமே ஆன்லைன் மோடுக்கு வந்துவிட்டதால் லேப்டாப்போ அல்லது டேப்லெட்டோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. தாமதம் இல்லாமல் வழங்கினால் கல்வி கற்பதற்கு பேருதவியாக இருக்கும்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.